குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!
2 Apr 2026, 5:30 am

குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!

நாகர்கோவில், ஏப். 1- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி குமரி மாவட்ட மக்கள் தலைவர்களாக வாழ்ந்து மறைந்த கம்யூனிஸ்ட் முன்னோடிகளான தோழர்கள் ஜி.எஸ். மணி, டி.மணி, ஜே.ஹேமச்சந்திரன், பி.திவாகரன், பி.பெருமான் ஆகியோரது நினைவிடங்களில் ஏப்ரல் 1 புதனன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தேர்தல் பிரச்சார பயணத்தை துவக்கினார். புதன்கிழமை காலை மார்த்தாண்டம் அருகில் வேட்டுமணிமண்டபத்தில் அமைந்துள்ள தோழர்கள் ஜி.எஸ்.மணி, டி.மணி நினைவிடங்களில் ஆர்.செல்லசுவாமி மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து செருக்கோலில் உள்ள தோழர் பி.திவாகரன் நினைவிடத்திலும் திரு வட்டார அருகில் மார்தாண்டம் உள்ள தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவிடத்திலும், தாமரைகுளத்தில் பி.பெருமான் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.