தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எல்.எண்டத்தூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க குரல் கொடுப்பேன் சிபிஎம் வேட்பாளர் பா. சுகந்தி வாக்குறுதி

25 Sept 2026, 1:10 am
எல்.எண்டத்தூர் பகுதியில் ஆரம்ப சுகாதார  நிலையம் அமைக்க குரல் கொடுப்பேன் சிபிஎம் வேட்பாளர் பா. சுகந்தி வாக்குறுதி

எல்.எண்டத்தூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க குரல் கொடுப்பேன் சிபிஎம் வேட்பாளர் பா. சுகந்தி வாக்குறுதி

மதுராந்தகம், செப். 24-செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தனித் தொகுதிஇடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பா. சுகந்தி, மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எல்.எண்டத்தூர் பகுதியில் வியாழக்கிழமை (செப். 24) பிரச்சாரம்மேற்கொண்டார். பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்பேசினார்.

இதனைத் தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆனைக்குன்றம், பொற்பனங்கானை, பாபுராயன்பேட்டை, அத்திவாக்கம், மஞ்சள் கொள்ளைமேடு, பொறங்கால், அன்னங்கால், ஒரத்தி, லட்சுமிபுரம், மாவல்வாடி, மேட்டுப்பாளையம், திண்ணலூர், சென்னேரி, சிறுதாமூர், அனந்தமங்கலம், வடமன்னிப்பாக்கம், வடக்குப்புத்தூர், எட்டுப்பட்டி, கொங்கரை, களத்தூர், முன்னங்குளம், முருங்கை,அல்லூர், கரசங்கால், நெடுங்கல், வெளியம்பாக்கம், எடையாளம், மின்னல், மின்னல்சித்தாமூர், சிறுபேர்கண்டிகை, கல்லிகுளம், அம்மனூர், அல்லலூர், அருந்ததிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அப்பகுதி மக்கள், எல்.எண்டத்தூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் அச்சிறுப்பாக்கம் சென்றுமருத்துவ வசதி பெற வேண்டிய நிலை உள்ளதாகவும், எனவே அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி, “வெற்றி பெற்றால் எல்.எண்டத்தூர் பகுதியில் ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்கப்படும். கிராமப் பகுதிகளில் மிகவும் குறுகலாக உள்ளசாலைகள் விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும். விவசாயத்தையும் குடிநீரையும் பாதுகாக்க ஏரிகளும் நீர்வரத்துக் கால்வாய்களும் தூர்வாரப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதியான எல்.எண்டத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி செய்து தரப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளகுறைபாடுகள் களையப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.எல்.எண்டத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் மலர்களைத் தூவியும், மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வேட்பாளர் பா.சுகந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், சாமுவேல் ராஜ், திருவண்ண்ணாமலை மாவட்டச் செயலாளர் செல்வம், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே.நேரு, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா,மாநிலக் குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், சிவகுமார், எஸ்.நம்பராஜன், இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின்காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், சிபிஎம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.அர்ஜுன்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்வி.அரிகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் க.ஜெயந்தி, பி.சண்முகம், வி.திருமலை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.