தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரியில் திருபுவனை தொகுதியில் களம் காணும் சிபிஎம் வேட்பாளர் மா.தட்சிணாமூர்த்தி

27 Mar 2026, 3:15 pm
புதுச்சேரியில் திருபுவனை தொகுதியில்  களம் காணும்  சிபிஎம் வேட்பாளர்  மா.தட்சிணாமூர்த்தி
<p><strong>புதுச்சேரியில் திருபுவனை தொகுதியில் &nbsp;களம் காணும் &nbsp;சிபிஎம் வேட்பாளர் &nbsp;மா.தட்சிணாமூர்த்தி</strong></p> <p>புதுச்சேரியின் மேற்கு திசையில் தமிழ கத்தின் விழுப்புரம் மாவட்டத்தையொட்டி அமைந்துள்ளது தொகுதி, திருபுவனை &nbsp; (தனி) தொகுதியாகும். இத்தொகுதியில் பிரதான மான தொழில் என்றால் விவசாயம் தான்.அதேபோல் ஒன்றிய அரசின் உணவு கழகத்திற்கு சொந்தமான உணவு கிடங்கு திருவாண்டார் கோவில் பகுதியில் உள்ளது. புதுச்சேரி மாநில அரசுக்கு சொந்தமான நூற்பாலை யும் திருபுவனை தொகுதியில் செயல்பட்டது. ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் அந்த நூற்பாலை &nbsp;மூடியே கிடக்கிறது. அதேப் போல் தொழிற்பேட்டையும் ஒன்று உள்ளது. இத்தொகுதியில் &nbsp; ஆண் வாக்காளர்கள் 14,976 பேரும், பெண் வாக்காளர்கள் 16,867 பேர் என &nbsp;மொத்த வேட்பாளர்கள் 31 ஆயி ரத்தி 843 பேர் உள்ளனர். கடந்த 1964 ஆம் ஆண்டில் இருந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. 14 முறை நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்,திமுக,அதிமுக,என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்று வந்துள்ளது. தற்போது இத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளர் மா.தட்சணாமுர்த்தி &nbsp;உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி 30 உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வெற்றி வேட்பாளர் தட்சிணாமுர்த்தி திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட திருவாண்டார்கோவிலில் வசித்து வரும் மா.தட்சிணாமூர்த்தி, வழக்கறிஞர் பணி செய்து வருகிறார்.சிறு வயதில் சமூக அக்கறையுடன் வாலிபர் சங்கத்தில் இணைந்து அதன் முலம் சமுக பணி செய்து வந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து, தற்போது மண்ணாடிப்பட்டு கமிட்டி உறுப்பினராக செயல்பட்டுவருகிறார். கூலி தொழிலாளி குடும்பத்தில் பிறந்தவர். தற்போது திருமணம் மாகி மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் &nbsp;திரு வாண்டார்கோவில் பகுதியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.