பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் சிபிஎம் வேட்பாளர் எல். சுந்தரராஜ் வாக்குறுதி
6 Apr 2026, 5:37 pm
<p><strong>பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் சிபிஎம் வேட்பாளர் எல். சுந்தரராஜ் வாக்குறுதி</strong></p>
<p>சென்னை, ஏப்.6- பட்டா கிடைக்க நட வடிக்கை எடுப்பேன் என்று சிபிஎம் வேட்பாளர் சுந்தர ராஜ் தெரிவித்தார். மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதி யில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர ராஜ் 14ஆவது வார்டு சுங்க ச்சாவடி அருகில் இருந்து தனது தேர்தல் பிரச்சா ரத்தை தொடங்கினார். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத் தினார். பின்னர் தியாகராய புரம், பீர்பயில்வான் தர்கா ரோடு, சதானந்தபுரம், புதிய காலனி, சிவகங்கா புரம், திருச்சினாங்குப்பம், காந்தி நகர், மல்லிகாபுரம், சலவையாளர் குடியிருப்பு, ஒண்டிகுப்பம் ஆகிய பகுதி களில் சென்று பொது மக்களிடம், வணிகர்களிடம் திங்களன்று (ஏப். 6) வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் எல்லாம் பட்டாசு வெடித்து, வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து, மலர் தூவி, சால்வை அணிவித்து மோர், குளிர்பானங்கள், இளநீர் வழங்கி சிறப்பான வரவேற்பளித்து, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். எல்.சுந்தரராஜ் செய்தி யாளர்களிடம் பேசுகை யில், 14ஆவது வட்டத்தில் உள்ள மக்களுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் பட்டா வாங்கி கொடுத்துள்ளார். பட்டா கிடைக்காதவர்களுக்கு பட்டா கிடைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுப்பேன். மேலும் பொறியியல் கல்லூரி கொண்டுவர முயற்சிப்பேன். கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஏராளமான பணிகளை செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத் திற்கு சென்ற இடங்களில் மக்கள் உற்சாகமாக வர வேற்பளித்தனர். திமுக ஆட்சி மீண்டும் அமைந் தால்தான் இதுபோன்ற பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும். எனவே எனக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வார் கள் என்ற நம்பிக்கை உள்ள தாக தெரிவித்தார். இதில் தேர்தல் பணிக் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கிழக்கு பகுதி செயலாளர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மேற்கு பகுதிச் செயலாளர் வை.ம. அருள்தாசன், திமுக 14 ஆவது வார்டு வட்டச் செயலாளர்கள் கார்த்தி கேயன், சந்தர், மாமன்ற உறுப்பினர் பானுமதி சந்தர், தொகுதி பொறுப் பாளர் எஸ்.மோகன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் எம்.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மாதரம்மாகனி பரூக், பி.வி.முருகன், கே.பி.துரை (காங்கிரஸ்), விசிக மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், தேமுதிக பகுதிச் செயலாளர் பவுல் ராஜ், மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கே.ஜாபர் உசேன், என்.இப்ராஹீம் காஜா, நசீர் அகமத், எல்.ஜாபர் சாதிக், எஸ்.டி.மோகன், சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெயராமன், பகுதிச் செய லாளர்கள் எஸ்.கதிர்வேல், ஆர்.கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
