பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு கூட்டணிக் கட்சியினர் - இளைஞர்கள் உற்சாக வரவேற்பு
6 Apr 2026, 4:15 pm
<p><strong>பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு கூட்டணிக் கட்சியினர் - இளைஞர்கள் உற்சாக வரவேற்பு</strong></p>
<p>நாகர்கோவில், ஏப். 6- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி சிபிஎம் வேட்பா ளர் ஆர்.செல்லசுவாமி மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பணி குறித்து முதற்கட்ட அறிமுகம் நீடித்து வருகிறது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் வேட்பாள ராக சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தொகுதி முழு வதும் நேரடி சந்திப்புகளை நடத்தி வருகிறார். குறிப்பாக தேர்தல் பணி யாற்றும் கட்சி தலைவர்களையும், ஊழியர்களையும் அவர்களது இல்லம் தேடிச் சென்று தேர்தல் பணி களை விரைவுபடுத்தி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் பிர முகர்களும், கூட்டணி கட்சியினரும் அன்பான வரவேற்பளித்து வெற்றிக்கு உழைப்பதாக உறுதி யளித்து வருகின்றனர். ஞாயிறன்று அயக்கோடு ஊராட்சி, குலசேகரம், திற்பரப்பு, பொன்மனை பேரூராட்சி க்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இரவு பத்து மணி வரை நீடித்தது. இதில், திற்பரப்பு பேரூர் செயலாளர் ஜாண், எபநேசர், முன்னாள் துணை தலைவர் சுரேஷ், திமுக இலக்கிய அணி செயலாளர் மோகன்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை, குலசேகரம் வட்டார செயலாளர் சவுந்தர், மாவட்டக்குழு உறுப்பினர் விஸ் வம்பரன், ஜுடஸ் குமார், இன்ப ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திங்களன்று திக்கணங்கோடு, திருவிதாங்கோடு, விலவூர், கோதநல்லூர் பேரூராட்சிகளில் முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை வேட்பாளர் செல்லசுவாமி நேரில் சந்தித்தார். திக்கணங்கோடு, திருவிதாங் கோடு, அழகியமண்டபம் பகுதிகளில் கூட்டணி கட்சியினர் குறிப்பாக திமுகவை சேர்ந்த இளை ஞர்கள் ஏராளமானோர் திமுக தக்கலை ஒன்றியச் செயலாளர் அருளானந்த ஜார்ஜ் தலைமையில் வேட்பாள ருக்கு வரவேற்பளித்து வாக்கு சேக ரிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபன், விலவூர் பேரூ ராட்சி முன்னாள் தலைவர் பி.டி.எஸ்.மணி, ஓய்வுபெற்ற அரசு திருநெல்வேலி சட்டக்கல்லூரி முதல்வர் ஆசிர் தர்மராய், சுரண்டை அரசுக்கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் ஏ.பீர் கண், கவுன்சிலர்கள் ஜெயா, சுஜா, கிரிஜா ராணி ஆகியோரை நேரில் சந்தித்தார். இதில், திமுக தக்கலை ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ், இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ், தேமுதிக குமார், சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் தோ.வில்சன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மூத்த தோழர் கே.மாதவன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.</p>
