மூடப்பட்ட ஸ்பின்னிங் ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுப்பேன் திருபுவனை சிபிஎம் வேட்பாளர் தட்சிணாமூர்த்தி உறுதி!
1 Apr 2026, 4:02 pm
<p><strong>மூடப்பட்ட ஸ்பின்னிங் ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுப்பேன் திருபுவனை சிபிஎம் வேட்பாளர் தட்சிணாமூர்த்தி உறுதி!</strong></p>
<p>புதுச்சேரி, ஏப். 01- புதுச்சேரி திருபுவனை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வேட்பாளர் தட்சிணாமூர்த்தி, தொகுதியில் மூடப்பட்டுள்ள நூற்பாலையைத் திறந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்காளர்களுக்கு உறுதி அளித்துள்ளார். திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட மதகடிப்பட்டு மற்றும் கலிதீர்த்தாள் குப்பம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (மார்ச் 30) அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, 'அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்' சின்னத்திற்கு ஆதரவு கோரிப் பேசிய அவர், தொகுதி மக்களின் நலனுக்கான பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்தார். குறிப்பாக, விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 150 நாட்கள் வேலை பெற்றுத் தருவேன் என்று அவர் தெரிவித்தார். தொகுதியின் நீண்டகாலப் பிரச்சனையான மூடப்பட்ட ஸ்பின்னிங் ஆலையை மீண்டும் திறக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும், இதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்குவதோடு, தொகுதியின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பலப்படுத்தத் திட்டமிட்டுச் செயல்படுவேன் என்றும் அவர் வாக்காளர்களிடம் உறுதியளித்தார்.</p>
<p> </p>
