தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!

2 Apr 2026, 5:30 am
குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!

குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!

நாகர்கோவில், ஏப். 1- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி குமரி மாவட்ட மக்கள் தலைவர்களாக வாழ்ந்து மறைந்த கம்யூனிஸ்ட் முன்னோடிகளான தோழர்கள் ஜி.எஸ். மணி, டி.மணி, ஜே.ஹேமச்சந்திரன், பி.தியாகராஜன், பி.பெருமாள் ஆகியோரது நினைவிடங்களில் ஏப்ரல் 1 புதனன்று மலர்வணக்கம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தேர்தல் பிரச்சார பயணத்தை துவக்கினார். புதனன்று காலை மார்தாண்டம் அருகில் வேட்டுமணிமால் அமைந்துள்ள தோழர்கள் ஜி.எஸ்.மணி, டி.மணி நினைவிடங்களில் ஆர்.செல்லசுவாமி மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து செருக்கல்லில் உள்ள தோழர் பி.தியாகராஜன் நினைவிடத்திலும் திரு வட்டார் அருகில் மாத்தூரில் உள்ள தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவிடத்திலும், தாமரைகுளத்தில் பி.பெருமாள் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

அவருடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், என்.எஸ்.கண்ணன், பி.விஜயமோகனன், எம்.அகமது உசேன், கே.தங்கமோகன், வி.அனந்தசேகர், என்.ரெஜினிகுமார், ஆர்.ரெவி, மூத்த தோழர் கே.மாதவன் மற்றும் வட்டாரச் செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.