தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள நீர் நிலைகளை இணைக்கக்கோரி சிபிஎம் பிரச்சாரம்

28 Dec 2025, 5:05 pm
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள நீர் நிலைகளை இணைக்கக்கோரி சிபிஎம் பிரச்சாரம்
<p><strong>அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள நீர் நிலைகளை இணைக்கக்கோரி சிபிஎம் பிரச்சாரம்</strong></p> <p>அவிநாசி, டிச.28- அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் &nbsp;விடுபட்டுள்ள குளம், குட்டைகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று பிரச்சார இயக்கத்தில் ஈடு பட்டனர். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் &nbsp;விடுபட்டுள்ள குளம், குட்டைகளை சேர்க்க வேண்டும். தற்பொழுது செயல் பாட்டிலுள்ள இத்திட்டத்தில், நீர் நிரப் பாத குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப &nbsp;வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி ஒன்றியக் குழு சார்பில் ஞாயிறன்று பிரச்சார இயக் கம் நடைபெற்றது. ஆட்டையாம்பாளை யத்தில் துவங்கிய இந்த இயக்கத் திற்கு, கட்சியின் அவிநாசி ஒன்றியச் &nbsp;செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை &nbsp;வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க &nbsp;ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் துவக்கி வைத்து உரையாற்றினார். கரு வலூர், கானூர் புதூர், போத்தம்பாளை யம், துளசிபுரம், வடுகபாளையம், நடு வச்சேரி, நம்பியம்பாளையம், ஆலத் தூர், வெள்ளிம்பாளையம், உள்ளிட்ட &nbsp;20க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் சண்முகம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் வேலுச்சாமி, ஒன்றியப் பொருளா ளர் பழனிசாமி, பொதுத்தொழிலாளர் சங்க அவிநாசி செயலாளர் ராஜன், விவ சாயிகள் சங்க ஒன்றிய துணைச்செயலா ளர் குமாரசாமி, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கௌரிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.