சிபிஎம் பிரச்சார இயக்கம்
20 Jul 2026, 11:39 pm
<p><strong>சிபிஎம் பிரச்சார இயக்கம்</strong></p><p>திருப்பூர், ஜூலை 20 - திருப்பூர் மாநகராட்சி 1ஆவது வார்டு பகுதிகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் ஞாயிறன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தார். ஒன்றியச்செய லாளர் ஆர்.காளியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மாரப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.இளங்கோ, பி. மகாலிங்கம், ஜி.ரேவந்த் குமார், வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் முகமது ஆஷிக், கிளைச் செயலாளர்கள் மீனாட்சி, மனோகர், வெங்கடாசலம் ஆகியோர் பிரச்சார இயக்கத்தில் உரையாற்றினர். விஜயபுரி கார்டன், குமரன் காலனி, பிரியங்கா நகர், செட்டிபாளையம், இந்திரா நகர், நெச வாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.</p>
