மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் பிரச்சாரம்!
12 Jun 2026, 10:31 pm

மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் பிரச்சாரம்!

உடுமலை, ஜூன் 12- பள்ளபாளையம் ஊராட்சியில் நிலவும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சிபிஎம் கிளைச்செயலாளர் தண்டபாணி தலைமையில் பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, சிவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில், திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், உடுமலை ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதில், திருமூர்த்தி அணை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

உடுமலை - அமராவதி சாலையில் விபத்துகளை தடுக்க கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். கடந்த ஆட்சியில் சிமெண்ட் சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு, விடுபட்ட சாலைகளை உடனே அமைக்க வேண்டும்.

கொங்கலக்குறிச்சியில் மின்வாரிய இடத்தை விடுத்து, மாரியம்மன் கோவில் இடத்தில் புதிய மின்மாற்றிகளை அமைக்கும் குறிச்சிக்கோட்டை மின் அதிகாரிகளின் நடவடிக்கையை கைவிட்டு, சொந்த இடத்திலேயே அமைக்க வேண்டும்.

அரசு புறம்போக்கு நிலத்தை (ச.ச.எண்: 209/12) அளவீடு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்; புதிய லே-அவுட்களில் ‘ரிசர்வ் சைட்’ மற்றும் பூங்கா இடங்களை பாதுகாக்க வேண்டும்.

இந்திரா நகர் சமுதாய நலக்கூடம், இணைய வசதியுடன் கூடிய நூலகம் அமைக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் பாகுபாடின்றி வேலை தர வேண்டும். ஓடைகளில் ஹோட்டல் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

பிஏபி கால்வாய் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதோடு, விவசாயத்தை பாதிக்கும் காட்டுப்பன்றி, மயில்களை வனத்துறை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.