தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி சிபிஎம் பிரச்சாரம்
2 Oct 2026, 10:10 pm
<p><strong>தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி சிபிஎம் பிரச்சாரம்</strong></p><p>நாகர்கோவில், செப். 2-தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சிபிஎம் சார்பில் மாவட்ட செயலாளர் என்.எஸ்.கண்ணன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். </p><p>பிரச்சார இயக்கத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முகமது உசேன், எஸ்.அந்தோணி, எம்.அண்ணாதுரை, அகஸ்தீஸ்வரம் வட்டார செயலாளர் மணிகண்டன், மூத்த தோழர் சிவதாணு உள்பட பலர் பங்கேற்றனர்.</p>
