முந்தய பக்கம்

அடிப்படைவசதி கேட்டு எழும்பூரில் சிபிஎம் பிரச்சாரம்

21 Jan 2026, 3:58 pm
அடிப்படைவசதி கேட்டு எழும்பூரில் சிபிஎம் பிரச்சாரம்
<p><strong>அடிப்படைவசதி கேட்டு எழும்பூரில் சிபிஎம் பிரச்சாரம்</strong></p> <p>சென்னை, ஜன.21- எழும்பூர் தட்டாங்குளம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துத்தரக்கோரி சிபிஎம் சார்பில் செவ்வாயன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. தட்டாங்குளத்தில் சிபிஎம் &nbsp;77 வது வட்டக் கிளைச் செயலாளர் ஆர்.கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா பேசினார். கோரிக்கைகள் எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட &nbsp;தட்டாங்குளம் பகுதியில் 80 ஆண்டுகளாக கோயில் நிலம், மாநகராட்சி நிலம், தனியார் நிலத்தில் வசிக்கும் மக்க ளுக்கு இலவச பட்ட வழங்க வேண்டும். விளையாட்டு மைதான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தெருக்களில் பல ஆண்டுகளாக பூமியில் பதித்துள்ள மின்சார கேபிள்கள், வயர்களை புதுப்பித்து மின்சார இணைப்பு பெட்டி அமைக்க வேண்டும். ஈமச்சடங்கு செய்யும் குளத்தை &nbsp;சீரமைத்து கொடுக்க வேண்டும், குப்பைகளை அகற்றி தூய்மையாக பராமரிக்கவேண்டும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2 ரேசன் கடையாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் முதற்கட்ட தேர்தல் நிதியாக ரூ.20ஆயிரத்தை கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வாவிடம் கிளைச் செயலாளர் ஆர்.கோவிந்தன் வழங்கினார். மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் &nbsp;ஆர்.முரளி, கே.முருகன், எழும்பூர் பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர் பி.கே.மூர்த்தி, நகர விற்பனைக்குழு உறுப்பினர் டி.மாலதி, எம்.வெங்கட்ராவ், ஜி.நாகேஷ் ராவ் &nbsp;மற்றும் &nbsp;மா.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram