உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் தீவிர பிரச்சாரம்
9 Apr 2026, 5:30 am

உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் தீவிர பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலி கிராமம், எடக்கல், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்த வேலுவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

இப்பகுதி மக்களின் நிறைவேற்றப்படாத நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் வசதி மற்றும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேட்பாளர் உறுதியளித்தார்.

இந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ஜெய்சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.