புதுச்சேரி பாஜக கூட்டணி அரசை கண்டித்து சிபிஎம் பிரச்சார இயக்கம்
15 Jul 2026, 1:32 am
<p><strong>புதுச்சேரி பாஜக கூட்டணி அரசை கண்டித்து சிபிஎம் பிரச்சார இயக்கம்</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 14 – புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் செயல்பாடற்ற தன்மையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் ஒரு வார காலப் பிரச்சார இயக்கம் செவ்வாயன்று தொடங்கியது. நிர்வாக முடக்கம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக் கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகி யும், பதவியேற்ற அமைச்சர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. இதனால் புதுச்சேரி அரசு நிர்வாகம் முற்றி லுமாக முடங்கியுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் -பாஜக ஆட்சியின் பதவிச் சண்டையால், மாநில மக்களின் நலன்கள் முற்றிலும் புறக் கணிக்கப்படுவதாக அக்கட்சி குற்றம் சாட்டி யுள்ளது. மக்கள் பிரச்சினைகள் புதுச்சேரி நகரத்தில் நிலவும் கடும் குடிநீர் பற்றாக்குறை, ரேஷன் கடைகளை மூடும் ‘டிஜிட்டல் கார்டு’ முறை, மின்துறை யில் ப்ரீபெய்ட் மீட்டர்களைப் பொருத்தித் தனியார்மயமாக்கும் முயற்சி, போலி மருந்து ஊழல் குற்றவாளிகளைப் பாதுகாத்தல், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பின்மை மற்றும் வேலையின்மை போன்ற மக்கள் விரோதக் கொள்கைகளை முன்வைத்து, வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கிப் பிரச்சாரம் மேற் கொள்ளப்படுகிறது. இந்த இயக்கம் ஜூலை 14 முதல் 18-ஆம் தேதி வரை புதுச்சேரி முழு வதும் நடைபெறுகிறது. பிரச்சாரத் தொடக்கம் புதுச்சேரி காந்தி வீதியில் தொடங்கிய இந்தப் பிரச்சாரத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகரக் கமிட்டி செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மூத்த தலைவர் முருகன் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். மாநில செயலாளர் ராமச் சந்திரன், மாநிலத்தில் நிலவும் அசாதாரணச் சூழல் குறித்து விளக்கிப் பேசினார். இந்நிகழ் வில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரு மாள், ராஜாங்கம், சீனுவாசன், கொளஞ்சி யப்பன் மற்றும் மாநிலக் குழு உறுப்பி னர்கள், கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து வில்லியனூர், பாகூர், மண்ணாடிப்பட்டு மற்றும் உழவர் கரை ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் நடை பெற்றது.</p>
