அடிப்படை வசதி கோரி சிபிஎம் சாலை மறியல் மேயர் உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>அடிப்படை வசதி கோரி சிபிஎம் சாலை மறியல் மேயர் உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ்</strong></p>
<p>சேலம், பிப்.18- சேலம் மாநகராட்சிக்குட்பட்ட மூலப்பிள்ளையார் கோவில் பகுதி யில் முறையான சாலை மற்றும் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற சாலை மறி யல் போராட்டத்தை அடுத்து, மாநக ராட்சி மேயர் நேரில் வந்து உறுதிய ளித்ததால் போராட்டம் தற்காலிக மாக வாபஸ் பெறப்பட்டது. சேலம், மூலப்பிள்ளையார் கோவில் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக முறையான சாலை வசதி இல்லாமல் மக்கள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக தரமான தார்ச்சாலை அமைத்துத் தர வேண்டும், முறை யாக சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும் மற்றும் பழுதடைந் துள்ள தரைப்பாலத்தை அகற்றி விட்டு, புதிய தரைப்பாலம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இப்பகுதி மக் கள் தொடர் கோரிக்கைகளை முன் வைத்து வந்தனர். இந்நிலையில், இக்கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி தலைமையில் நூற் றுக்கணக்கான பொதுமக்கள், செவ் வாய்பேட்டையில் இருந்து கந்தம் பட்டி செல்லும் பிரதான சாலையில் புதனன்று அமர்ந்து திடீர் மறிய லில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், “மாநக ராட்சி மேயர் நேரில் வந்து உறுதிய ளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்” என பொதுமக் கள் உறுதியாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, இன்னும் இரண்டு நாட்களுக்குள் பழுதடைந்த சாலைகளைச் சீர மைப்பதோடு, மற்ற அடிப்படை வச திகளையும் போர்க்கால அடிப் படையில் செய்து தருவதாக உறுதி யளித்தார். மேயரின் இந்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட பொது மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சேலம் மேற்கு மாநகரச் செய லாளர் பி.கணேசன் தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எம்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன். மேற்கு மாநகரக்குழு உறுப்பினர் கள் உட்பட பொதுமக்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.</p>
