பைவ் ஸ்டார் பைனான்ஸ் நிறுவனத்தின் கந்துவட்டி கொள்ளைக்கு எதிர்ப்பு சிதம்பரத்தில் சிபிஎம் முற்றுகைப் போராட்டம்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>பைவ் ஸ்டார் பைனான்ஸ் நிறுவனத்தின் கந்துவட்டி கொள்ளைக்கு எதிர்ப்பு சிதம்பரத்தில் சிபிஎம் முற்றுகைப் போராட்டம்</strong></p>
<p>சிதம்பரம், ஜன. 27- சிதம்பரத்தில் பைவ் ஸ்டார் பைனான்ஸ் நிறுவனம் ஹவுசிங் லோன் (வீட்டுக் கடன்) என்ற பெயரில் கந்துவட்டி கொள்ளையில் ஈடு படுவதைக் கண்டித்து, அந்நிறுவனத்தின் முன்பு சிபிஎம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. பரங்கிப்பேட்டை அருகே உள்ள வில்லிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர், சிதம்பரம் எஸ்.பி. கோயில் தெரு வில் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்தக் கடனுக்காக அவர் இதுவரை வட்டியாக ரூ. 1,35,000 மற்றும் அசல் தொகை ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 3,35,000 கட்டியுள்ளார். சுமார் 60 மாதங்கள் முறையாகப் பணம் கட்டிய நிலையில், தனது வீட்டுப் பத்தி ரத்தைத் திரும்பக் கேட்கச் சென்றபோது, இன்னும் 24 மாதங்களுக்கு வட்டிப் பணம் கொடுத்தால்தான் பத்திரத்தைக் கொடுப் போம் என நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. நிறு வனத்தின் இந்த அடாவடியான கந்துவட்டி கொள்ளையைக் கண்டித்து செவ்வாயன்று (ஜன.27) அதன் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த தலைவர் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றியச் செயலாளர் விஜய், சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், வேல்முருகன், தனசேகரன், அசன் முகமது மன்சூர், ராமானுஜம், கவுன்சிலர் ராஜேஸ்வரி, வில்லியநல்லூர் கிளைச் செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பைவ் ஸ்டார் பைனான்ஸ் நிறு வனத்திற்கு எதிராகக் கண்டன முழக்கங் களை எழுப்பினர்.</p>
