தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூடநம்பிக்கையின் ஊற்றுக்கண்ணாக செயல்படும் நாகை மண்டல போக்குவரத்து கிளை மேலாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள சிபிஎம் வேண்டுகோள்

28 Feb 2026, 2:29 pm
மூடநம்பிக்கையின் ஊற்றுக்கண்ணாக செயல்படும்  நாகை மண்டல போக்குவரத்து கிளை மேலாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள சிபிஎம் வேண்டுகோள்
<p><strong>மூடநம்பிக்கையின் ஊற்றுக்கண்ணாக செயல்படும் &nbsp;நாகை மண்டல போக்குவரத்து கிளை மேலாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள சிபிஎம் வேண்டுகோள்</strong></p> <p>திருவாரூர், பிப்.28- &nbsp;திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் திருவாரூர் கிளை அலுவலகத்தில், அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்து மற்றும் பழுதடைவதால் சிறப்பு பரிகார யாகம், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதேபோல், நாகை மண்டல கிளை போக்கு வரத்து அலுவலங்கள் வேளாங்கண்ணியை தலைமையிடமாகக் கொண்ட காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை கிளை அலுவலகத்திலும் பேருந்து விபத்து நிகழாமல் இருக்க நடைபெற்ற பரிகார பூஜைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த செய்தியைத் தொடர்ந்து, சிபிஎம் திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் கூறுகையில், &ldquo;பகுத்தறிவு கொள்கை வழியில் நடைபெறும் தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட அதிகாரிகள் ஊடுருவலா என சந்தேகம் எழுகிறது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சில நாட்கள் முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கும் போது, &ldquo;பாஜக என்பது தனித்து இயங்கும் கட்சி அல்ல, அது 2,500 கிளை அமைப்புகளைக் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இயக்கம். அறிவு ஜீவிகளை ஒடுக்குவதற்கும், சமூகத்தில் கலவரங்களை உருவாக்குவதற்கும் எனத் தனித்தனிப் பிரிவுகளைக் கொண்டுள்ள மிக அபாயகரமான சக்தி இது. திருவிழாக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து இடங்கள் என மக்கள் கூடும் இடங்களில் ஊடுருவி, சாதி-மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்த காத்திருக்கிறார்கள். மக்களிடையே நிலவும் ஒற்றுமையைச் சீர்குலைக்க நினைக்கும் இத்தகைய வர்க்க விரோதச் சக்திகளை நாம் அம்பலப்படுத்த வேண்டும். ஆகவே தமிழக முதல்வர் உடனடியாக இப்பிரச்சனையில் தனி கவனம் செலுத்தி தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பிற்போக்குத்தனமாக செயல்படும் நபர்களை கண்டறிந்து கடுமையான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்&rsquo;&rsquo; என்றார். &nbsp; இந்நிலையில் தான், தமி ழ்நாடு அரசு போக்குவரத்து கும்பகோணம் கோட்டம், நாகை மண்டலம், வேளாங்கண்ணி தலைமை யிடத்தில் உள்ள பொதுமேலாளர் ஹச். ராஜேந்திரன், தொழில்நுட்ப துணை மேலாளர் எம். சிதம்பரகுமார் வழிகாட்டலுடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக, டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி தலைமையில் நடைபெற்ற பரிகார பூஜையில், மாட்டு சிறுநீரை, பேருந்துகள் மீது தெளித்து பூஜை நிகழ்வை முடித்துள்ளனர். &nbsp;இதன் தொடர்ச்சி யாகத்தான் காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் கிளை அலுவலகங்களிலும் பரிகார பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கிளை மேலாளர்கள் மற்றும் மறைமுகமாக தூண்டுகோலாக உள்ள உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்&rsquo;&rsquo; என தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.