மார்த்தாண்டத்தில் சிபிஎம் சார்பில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, கியூபா ஆதரவு கருத்தரங்கம்
15 Jul 2026, 10:41 pm
<p><strong>மார்த்தாண்டத்தில் சிபிஎம் சார்பில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, கியூபா ஆதரவு கருத்தரங்கம்</strong></p><p>மார்த்தாண்டம், ஜுலை 15- மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் நல்லூர் வட்டா ரக் குழு சார்பில் ஏகாதி பத்திய எதிர்ப்பு, கியூபா ஆத ரவு கருத்தரங்கம் மார்த்தா ண்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. பல்வேறு உலக நாடுகள் மீது தாக்குதல் நடத்தியும், அந்நாட்டு அரசுகளை கவி ழ்த்தும், தலைவர்களை கொலை செய்தும், வளங்க ளை சுரண்டும் அமெரிக்க ஏகாதிபத்திய செயல்பாடு களை கண்டித்தும், சோசலிச கொள்கைகளை அமல்படுத்தும் கியூபா நாட்டை ஆதரித்தும் இந்த கருத்தரங்கம் நல்லூர் வட்டாரக் குழு செயலாளர் ம ஜஸ்டின் தலைமையில் நடைபெற்றது. கையெ ழுத்து இயக்கமும் நடை பெற்றது. இதில் நூற்றுக் கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு கையெ ழுத்திட்டனர். வட்டாரக்குழு உறுப்பி னர் பி ஜோதிஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் என் எஸ் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ நீலாம்பரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மார்க்சி ஸ்ட் தத்துவார்த்த இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் ச. லெனின் கருத்துரையாற்றி னார். கருத்தரங்கில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அண்ணாதுரை, முத்த தோழர்கள் கே. மாதவன், ஜி. முரளிதரன், வட்டாரக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
