தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரகண்டநல்லூரில் சிபிஎம் போராட்ட அறிவிப்பு! கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அதிகாரிகள் ஒப்புதல்

26 Feb 2026, 5:09 pm
அரகண்டநல்லூரில் சிபிஎம் போராட்ட அறிவிப்பு!  கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அதிகாரிகள் ஒப்புதல்
<p><strong>அரகண்டநல்லூரில் சிபிஎம் போராட்ட அறிவிப்பு! &nbsp;கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அதிகாரிகள் ஒப்புதல்</strong></p> <p>விழுப்புரம், பிப். 26- அரகண்டநல்லூர் பேரூராட்சி முன்பு மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவிருந்த தொடர் முழக்கப் போராட்டத்தையடுத்து, உடனடியாக வட்டாட்சியர் தலைமையில் நடை பெற்ற அமைதிக் கூட்டத்தில் கோரிக் கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர், செயல் அலு வலர், காவல் ஆய்வாளர் ஆகி யோர் முன்னிலையில், அரசின் சம்பந்தப்பட்ட ஏழு துறை அதி காரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அரகண்டநல்லூர்-திருக்கோவிலூர் இணைப்பு தென் பெண்ணை ஆற்றுத் தரைப் பாலத்தை மேம்பாலமாக உயர்த்தி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இப்பணியைப் போர்க்கால அடிப்படையில் துவக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மார்ச் 10-ஆம் தேதிக்குள்ளாக மேம்பாலப் பணி துவக்கப்படும் எனவும், நகருக்குள் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் சாலை அகலப்படுத்தித் தரப்படும் எனவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. நகர்ப்புற நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை இந்த ஆண்டி லேயே இப்பேரூராட்சியில் துவக்கப் பரிந்துரை செய்து அரசுக்கு அனுப்பிடப் பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது. ஃபெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை, ஏனைய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதிகள் செய்து தரவும் அதிகாரிகள் முன்வந்துள்ளனர். இதனால் சிபிஎம் போராட்ட அறிவிப்புக்கு முன்பே கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள ப்பட்டுள்ளன. மேலும் 2.0 திட்டத்தில் குடிநீருக்கு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பை நிபந்தனையின்றித் தரப்படும் எனவும், குறைந்தபட்சக் கட்டணம் ரூ.100 மாதந்தோறும் வசூலிக்கப்படும் எனவும், குழாய்கள் பாதுகாக்கப்படும் எனவும் உறுதிய ளித்தனர். தொன்மை மிக்க அரகண்ட நல்லூர் அழகிய பொன்னம்மை உடனுறை அதுல்ய நாதேஸ்வரர் ஆலய வளாகத்தில் இக்கோவி லுக்கான கோயில் நிர்வாக அலு வலகம் மார்ச் 10-ஆம் தேதிக்குள் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். வாடகைக் கட்டிடத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உதவிச் செயற்பொறியாளர், இளமின் பொறியாளர் அலுவலகங்களுக்கு அரசுக்குச் சொந்தமான அரகண்ட நல்லூர் சர்வே எண் 98/2-இல் புதிய கட்டிடம் அமைத்திட பரிந்துரைத்து முன்மொழிவு அனுப்புவது என வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத் துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டது. 10, 11-வது வார்டு மாரியம்மன் கோவில் தெரு பாதை புறம்போக்கில் உள்ள குடும்பங்களுக்குப் பட்டா வழங்கு வதற்கான ஆவணங்களைத் தயார் செய்து அரசுக்கு அனுப்பப்படும் எனவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சொந்த வீடு இல்லாத கூலித் தொழிலாளிகளுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. நகரத்தில் ரயில்வே கட்டிடத்திற்குத் தெற்கே பகுதி நேர நியாய விலைக் கடை அமைத்திட முன்மொழிவு அனுப்ப வட்ட வழங்கல் துறையின் மூலம் உறுதி அளிக்கப்பட்டது. திருக்கோவிலூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்திட வந்துள்ள முன்மொழிவைத் தயார் செய்து உடனடியாக அனுப்புவது என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதில் போராட்டக் குழுவின் தலை வர் ஏ.ஆர்.கே. தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். வேல்மாறன், வட்டச் செயலாளர் எஸ். கணபதி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஆர். தாண்டவராயன், எம். முத்துவேல், வட்டக் குழு ஏ.வி. கண்ணன், என்.எஸ். ராஜா, சையத் ஜகாங்கீர், டேவிட், உமாமகேஸ்வரி, ராமலிங்கம், பி. முருகன், நகரக் குழு பொன். ராமகிருஷ்ணன், ஏ. பொன்முடி, ஏ. ரவி, ஜி. ரவி, எஸ். சிவகுமார், என். வீரன் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். இதனையடுத்துப் போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.