தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விலைவாசி உயர்வைக் கண்டித்து சிபிஎம், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

4 Nov 2026, 10:49 pm
விலைவாசி உயர்வைக் கண்டித்து சிபிஎம், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வைக் கண்டித்து சிபிஎம், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், நவ.4-அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப் படுத்தக் கோரி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் பாத்திமாநகரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் எஸ்.சகாயராஜ் தலைமை வகித்தார். நகர்குழு உறுப்பினர்கள் பி.ராஜா, ஆர்.விஜயபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்செயலாளர் எம்.ஜெயபாரத் துவக்கி வைத்தார். மூத்த தோழர் எஸ்.பாலசுப்பிரமணியன் விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச்சாமி, எம்.சாராள், நகர் குழு உறுப்பினர்கள் வி.பாலமுருகன், கே.பாலமுருகன், எம்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாதர் சங்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புல்லலக்கோட்டை சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் என்.உமாமகேஸ்வரி பேசினார். மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி கண்டன உரையாற்றினார். நகர் தலைவர் ஐ.ஜெயா, கார்த்திகைச் செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.