செங்கம் சட்டமன்றத் தொகுதியில் சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டம்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>செங்கம் சட்டமன்றத் தொகுதியில் சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டம்</strong></p>
<p>திருவண்ணாமலை, ஏப். 4- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடை பெற்றது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி செங்கம் சட்டமன்றத் தொகுதி (திமுக) வேட்பாளர் மு.பெ.கிரி அவர்களை ஆதரித்து நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சிபிஎம் வட்டாரச் செயலாளர் பி.கணபதி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் சி.எம்.பிரகாஷ் வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அண்ணா மலை முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேட்பாளர் மு.பெ.கிரி பங்கேற்றுப் பேசினார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.இலட்சுமணன், எஸ்.ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றுத் தேர்தல் பிரச்சாரம் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.</p>
