சிபிஎம் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் தாமரைச்செல்வன் குடும்பத்திற்கு அரசு ரூ. 6 லட்சம் நிவாரணம்!
12 Nov 2025, 3:20 pm
<p><strong>சிபிஎம் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் தாமரைச்செல்வன் குடும்பத்திற்கு அரசு ரூ. 6 லட்சம் நிவாரணம்!</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, நவ. 12 - திருச்சி பீம நகர் கீழத் தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (26). பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளைஞரான இவர், 5 பேர் கொண்ட கும்பலால் கொடூர மாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இளை ஞர் தாமரைச்செல்வனின் படுகொலையைக் கண்டித்தும், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத் தின்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும்; குடும்பத்தின ருக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணி, புதிய தமிழகம், வீர தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை உள்ளிட்ட இயக்கங்கள் சார்பில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் வருவாய் த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, படு கொலை தொடர்பாக, வன் கொடுமைத் தடுப்பு சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், தாமரைச்செல்வனின் மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தினரிடம் ரூ. 6 லட்சம் அரசு நிவாரண தொகைக்கான காசோலை யை திருச்சி மேற்கு வட்டா ட்சியர் பிரகாஷ் வழங்கி னார். முன்னதாக போராட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிச்செல்வன், தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர்கள் ஆர். கலைச்செல்வி, எம். ஜெயசீலன், மாவட்டத் தலைவர்கள் எஸ். ரேணுகா, கோ. கனல்கண்ணன் மற்றும் பா. லெனின், சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
