தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாயனப்பாதையை மீட்கக்கோரி சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்

23 Dec 2025, 4:05 pm
மாயனப்பாதையை மீட்கக்கோரி சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்
<p><strong>மாயனப்பாதையை மீட்கக்கோரி சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்</strong></p> <p>சேலம், டிச. 23&ndash; மயானப் பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுக் கும் ஆதி திராவிடர் நலத்துறை வட்டாட்சியரை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கீழ் தொம்பை பகுதியில் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், ஆத்தூர் வட் டம், கீரிப்பட்டி பேரூராட்சிக்குட் பட்ட கீழ் தொம்பை கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக் கள் வசித்து வருகின்றனர். இப்ப குதி மக்களுக்கென சுமார் 1.5 கி.மீ &nbsp;தொலைவில் மயானம் அமைந்துள் ளது. நீண்ட காலமாக மயானத் திற்கு செல்ல பாதை இல்லாத நிலை யில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 21 அடி அகலத்திற்குப் பாதை ஒதுக்கப் பட்டது. கடந்த ஐந்து மாதங்க ளுக்கு முன்பு, இந்தப் பாதையில் சிமெண்ட் சாலை அமைக்கப் பேரூ ராட்சி நிர்வாகம் முயன்றபோது, ஒரு சில தனிநபர்கள் அதற்குத் தடையாக இருந்து பணியை நிறுத் தினர். இதனை கண்டித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு &nbsp;ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மயானப் பாதைக்கான நில அள வீடு தொடர்பாக உரிய நோட்டீஸ் கள் வழங்கப்பட்டும், 2025-ஆம் &nbsp;ஆண்டு வரை எவ்வித மேல் நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, டிச.10 ஆம் தேதி மயானப்பாதை மீட்புப் போராட்டத்தை அறிவித்தது. இதன் விளைவாக, டிச.5 ஆம் தேதி &nbsp;ஆத்தூர் வட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், பாதையை அளவீடு செய்து &nbsp;ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதைத்தொ டர்ந்து டிச.9 ஆம் தேதி 50 சதவீத நில அளவீடு பணிகள் முடிந்தன. ஆனால், டிச.11 ஆம் தேதி ஆக்கிர மிப்புகளை அகற்ற வந்த ஆதிதிரா விடர் நலத்துறை வட்டாட்சியர் ஜெயலட்சுமி, துறைக்குச் சொந்த மான பாதையை மீட்காமல் மாற்றுப் பாதை ஏற்படுத்த முயற்சி செய்த தாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பரிசீ லித்த உயர் அதிகாரிகள், வருவாய் கணக்கில் உள்ளவாறு மயானப் பாதையை உடனடியாக மக்கள் &nbsp;பயன்பாட்டிற்கு வழங்க உத்தரவிட் டனர். இருப்பினும், வட்டாட்சியர் இன்றுவரை அந்த உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. உயர் அதிகாரிகளின் உத் தரவை மதிக்காமல் செயல்படும் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட் சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மயானப் பாதையை உடனடியாக மீட்டுத் தர வேண் டும் என வலியுறுத்தி, கீழ் தொம்பை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன் தலைமையில் நடை பெற்ற இந்தப் போராட்டத்தில், தாலுகாக்குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடாசலம், எல். தங்கம்மாள், &nbsp;கே. பெரியண்ணன், வி. சத்யா, எஸ். பிரபு, சி. மாரிமுத்து, எஸ். செங்க மலை உள்ளிட்ட நூற்றுக்கணக் கான பொதுமக்கள் கலந்து கொண் டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.