தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலமற்ற ஏழை மற்றும் தலித் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குக தேன்கனிக்கோட்டையில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

12 Mar 2026, 4:20 pm
நிலமற்ற ஏழை மற்றும் தலித் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குக தேன்கனிக்கோட்டையில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம்
<p><strong>நிலமற்ற ஏழை மற்றும் தலித் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குக தேன்கனிக்கோட்டையில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம்</strong></p> <p>கிருஷ்ணகிரி, மார்ச் 12 - கிருஷ்ணகிரி மாவட்டம் &nbsp;தேன்கனிக் &nbsp;கோட்டை வட்டத்தில் தண்டரை கக்க தாசம் ஆருப்பள்ளி சொன்னேபுரம் கிராமங்களின் நிலமற்ற ஏழை மற்றும் தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு வியாழக்கிழமை (மார்ச் 12) &nbsp;காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் &nbsp;வீடுகளுக்கு பட்டா வும்,புரனபள்ளி கட்டுனிசே இருளர் மக்களுக்கு நிலம் அளிப்ப தாக கடந்த போராட்டத்தின் போது உறுதி அளித்தபடி உடனடியாக குடிமனை நிலமும், தலித் பகுதி மாதம்மா வீட்டிற்கு பட்டா வழங்கா மல் இழுத்தடிப்பதை கைவிட்டு உடனடியாக பட்டா வழங்க வலி யுறுத்தப்பட்டது. &nbsp;பேலாளம், எஸ்.பாளையம்.சின்னார்தொட்டி கிரா மங்களில் அரசு வழங்கிய விவசாய நிலங்களுக்கு பட்டாவுக்கான நிலத்தை உடனடியாக அரசு கணக்கில் பதிவேற்றம் செய்திடக்கோரிக்கை விடப்பட்டது. மணியம்பாடி,வெள்ளிச்சந்தை தலித் மக்களுக்கு வீட்டு மனை ஒதுக்கிட, இருதுக்கோட்டை பேலாளம் எஸ்.பாளையம் தோட்டிகுப்பம் &nbsp;எஸ்.குருபட்டி வழியாக தேன்கனிக் கோட்டையிலிருந்து பேருந்து விட, கெலமங்கலம் ஒன்றியம் பச்சப்பனட்டி ஊராட்சி குள்ளட்டி கிராமத்தில் வசித்து வரும் 210 தொழிலாளர் குடும்பங்களுக்கு அங்குள்ள சர்வே எண் 1034,1035 கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை ஒதுக்கிட மனு கொடுத்ததை ஆய்வு செய்து உடனடியாக வீட்டுமனைகள் வழங்கிடவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு கெல மங்கலம் தளி ஒன்றிய செயலாளர்கள் டி.ராஜா ஆர்.நடராஜன் தலைமை தாங்கினர். செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர் சி.பி.ஜெயராமன் பி.நாகராஜ் &nbsp;ரெட்டி, மாவட்ட குழு உறுப்பினர்கள் இருதயராஜ் டி.எஸ்.பாண்டியன் அனுமப்பா சீனிவாசன் கலந்து கொண்டனர். 300க்கும் மேற்பட்ட தலித் மலைவாழ் பழங்குடி பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வட்டாட்சியர் காவல்துறை அதிகாரிகள் தலைவர்க ளுடன் தொடர்ந்து நடத்திய பேச்சு வார்த்தையில் ஏற்கனவே உறுதிய ளித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக வும், மற்ற கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்ப தாகவும் கூறியதையடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.