குடிநீர் இணைப்பு கேட்டு சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்
13 Mar 2026, 4:52 pm
<p><strong>குடிநீர் இணைப்பு கேட்டு சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 13- பாலக்கோடு வட்டத்திற்குட் பட்ட ரெட்டியூர், சமத்துவபுரம் பகு தியில் வசிக்கும் இஸ்லாமிய மக்க ளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம், எர்ரனஅள்ளி ஊராட்சியில் ரெட்டியூர் சமத்துவ புரம் உள்ளது. இங்கு 100க்கும் மேற் பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக ளுக்கும் மேலாக குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை. குடிநீர் இணைப்புக்கு பணம் இல்லை என்றுக்கூறி திட்டமிட்டு இஸ் லாமிய மக்களுக்கு குடிநீர் தர மறுத்து வருகின்றனர். எனவே, உட னடியாக இஸ்லாமிய மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளி யன்று காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். பாலக்கோடு வட் டார வளர்ச்சி அலுவலகத்தில் நடை பெற்ற போராட்டத்திற்கு, சிபிஎம் வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.முத்து, தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கோவிந்த சாமி, விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் பி.முருகன் உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா பேச்சு வார்த்தை மேற்கொண்டார். அப் போது, உடனடியாக ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு பணிகளை துவங்குவ தாக உறுதியளிக்கப்பட்டது. அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.</p>
