வீட்டுமனை கேட்டு சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>வீட்டுமனை கேட்டு சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்</strong></p>
<p>ஈரோடு, நவ.12- வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மொடக்கு றிச்சி வட்டாட்சியர் அலுவ லகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் நடத்தப்பட்ட காத்திருப்புப் போராட்டம், உரிய அதிகாரி களின் உறுதிமொழியைத் தொடர்ந்து தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட் டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, நிலம் இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பவர் களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி, கடந்த மே மாதம் சிபிஎம் சார்பில் வட்டாட்சியரிடம் மனுக்கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது. இந்த இயக்கத்தில் பங்கேற்று 180-க்கும் மேற்பட்டோர் மனுக்களை வழங்கினர். மனு அளித்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனையடுத்து, புதனன்று, மொடக் குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட னர். மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் எம்.சசி தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தை துவக்கினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த துணை வட்டாட்சி யர் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், முதல மைச்சர் வருகையின்போது, ஏற்கனவே தகு தியானவர்களாக அடையாளம் காணப்பட்ட 31 பேருக்கு பட்டா வழங்கப்படும். தகுதி யுள்ள அனைவருக்கும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்திரா நகர் பகுதியில் உள்ள சுடுகாடு ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த வாய்மொழி உறுதி யைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத் தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முரு கேசன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் கே.ராஜ் குமார், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் டி. தங்கவேல், லோகநாதன், கணேசன் மற் றும் கிளைச் செயலாளர்கள் சதீஷ்குமார், அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேலம் மாதர் சங்க ஆர்ப்பாட்டம் இதேபோன்று, சேலம் பெத்தநாயக்கன் பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாதர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத் தில், தகுதிவாய்ந்த ஏழை மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். பேரூ ராட்சி பகுதிகளுக்கு 100 நாள் வேலை கொடுத் திட வேண்டும். நுண்கடன் கொள்ளையை தடுத் திட வேண்டும். பெண்கள், குழந்தைகளை பாது காத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வட்ட தலைவர் க. பெருமா தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் எம். ராமசாமி, மாற்றுதிறனாளி கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆ. கந்தன் வாழ்த்திப் பேசினர். இதில் மாவட் டச் செயலாளர் எஸ்.எம்.தேவி சிறப்புரை யாற்றினார். தாலுகா செயலாளர் கே.மேதி னம், தலைவர் எம்.துளசி, நிர்வாகிகள் நிவேதா, எஸ். வெங்கடேஸ்வரி உட்பட 50 பேர் கலந்து கொண்டனர். வட்டப் பொருளா லர் சி. இந்திராணி நன்றி கூறினார்.</p>
