இரட்டை இலக்க இடங்களில் போட்டியிடுவதே சிபிஎம் விருப்பம்
14 Mar 2026, 2:57 pm
<p><strong>இரட்டை இலக்க இடங்களில் போட்டியிடுவதே சிபிஎம் விருப்பம்</strong></p>
<p>சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டி சென்னை, மார்ச் 14 - “2026 சட்டமன்றத் தேர்த லில், இரட்டை இலக்க எண் ணிக்கையிலான இடங்களில் போட்டியிடுவதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப் பம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார். சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் பெ. சண்முகம் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். நெருக்கடியை மோடி அரசு மூடி மறைக்க முயல்கிறது! அப்போது, “அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்துள்ள போரின் காரணமாக மனிதகுலம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது; இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் பலவிதமான பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். ஆனால், ஒன்றிய பாஜக அரசு இந்த நெருக் கடிக்கு தீர்வு காணாமல் பிரச்சனையை மூடி மறைக்கிறது” என்று குற்றம் சாட்டினார். “நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதற்கான அனைத்து நிறுவனங்களின் தொலைபேசி எண்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அநேகமாக அந்த எண்கள் செத்து விட்டன. இந்த உண்மையை மூடி மறைத்து பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்” என்றும் சாடினார். “ஒன்றிய அரசின் இந்த அலட்சியத்தைக் கண்டித்தும், எரிவாயு தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், யுத்தத்தை நிறுத்த இந்திய அரசு அரசியல் செல்வாக்கை பயன்படுத்த வேண்டும், போரினால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி ஞாயிறன்று (மார்ச் 15) தமிழ்நாடு முழு வதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி முழுமையாக பங்கேற்கும்” என்றும் தெரி வித்தார். மேலும், செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்த அவர், “மார்ச் 14 திமுக-வுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. மார்ச் 15 ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அதற்கான தயாரிப்பு பணிகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள அமைச்சர்களும் அவரவர் மாவட்டத்தில் பணியாற்ற வேண்டி உள்ளது. எனவே, ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பேச்சு வார்த்தை நடைபெறும்” என்றார். எங்களின் விருப்பத்தைத் தெரிவித்துள்ளோம்! “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்பதை பேச்சுவார்த்தைக் குழுவிடம் தெரிவித்துள் ளோம். கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வந்துள்ள தால் நீங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை தரு வதில் சிரமம் என்பதை சொன்னார்கள். இருந்தாலும், இதே சிரமத்திற்கு மத்தியில்தான் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி வழங்கப் பட்டுள்ளது. தேமுதிக-விற்கு கூடுதலாக இடங்கள் வழங்கப்படும் என்பதை ஊடகங்கள் வெளிப் படுத்தி வருகின்றன. ஆகவே, அவர்களுக்கெல்லாம் கூடுதலாக தர வாய்ப்பு உள்ளபோது, இடதுசாரிகளுக்கு தர முடியாது என்று சொல்வதில் எந்தவித மான நியாயமும் இல்லை” என்ற பெ. சண் முகம், எனவே, “கடந்த முறையை விட கூடுத லான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என் பது தான் எங்களது முடிவு என்பதை பேச்சு வார்த்தைக் குழுவிடம் தெரிவித்துள்ளோம். திமுக தலைவரிடம் கலந்து பேசி தெரிவிப்ப தாக பேச்சுவார்த்தைக்குழு கூறியுள்ளது” என்றும் பெ. சண்முகம் தெரிவித்தார். குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்படும் என்ற சூழல் வந்தால் என்ன முடிவெடுக்கப்படும் என்ற கேள்விக்கு, “அதுபோன்ற நிலை வந்தால் கட்சியின் மாநிலக்குழு கூடி உரிய முடிவை எடுக்கும். மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலத்திற்கேற்ப தொகுதிகளைப் பெறு வதும் முக்கியம். கட்சியின் நலனும் முக்கியம். எனவே கட்சியின் பலத்திற்கு ஏற்ப தொகுதி களைப் பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுப்போம்” என்று பெ. சண்முகம் குறிப்பிட்டார்.</p>
