களமருதூரில் காவல் நிலையம் திறப்பு சிபிஎம் கோரிக்கை வெற்றி
22 Dec 2025, 4:47 am
<p>கள்ளக்குறிச்சி, டிச.22- உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தில் 37 கிராமங்களை உள்ளடக்கிய புதிய காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட களமருதூர் கிராமத்தில் சிபிஎம் 20 ஆண்டுகால கோரிக்கையின் வெற்றி யாக புதிய காவல் நிலை யம் களமருதூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் திங்களன்று (டிச.22)திறந்து வைக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட களவனூர், ஆத னூர், கூவாடு உட்பட 8 கிராமங்களையும், திரு நாவலூர் காவல் நிலை யத்திற்கு உட்பட்ட கள மருதூர், எம்.குன்னத்தூர், நத்தாமூர், கிளியூர் உட்பட 29 கிராமங்களையும் பிரித்து மொத்தம் 37 கிராமங்களை உள்ளடக்கிய களமருதூர் புதிய காவல் நிலையம் திறக்கப்பட்டது. புதியதாக திறக்கப்பட்ட களமருதூர் காவல் நிலை யத்திற்கு 2 உதவி ஆய்வாளர்கள் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 18 காவலர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். கள மருதூர் காவல் நிலை யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி, சிபிஎம் திரு நாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆனந்த் ராஜ், மாவட்ட குழு டி.எஸ்.மோகன், ஒன்றிய குழு கே.அய்யனார், பிள்ளை யார் குப்பம் கிளைச் செயலாளர் கலியன், களமருதூர் எஸ்.வேல்முருகன்,என்.செந்தில், கே. சக்திவேல்,பி.வேலு,எ.பாலு,திமுக ஒன்றிய செயலாளர் கே.வி.முருகன்,ஒன்றிய சிறு பான்மை அமைப்பாளர் நசருல்லா, முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் வேலு மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினர்.</p>
