முந்தய பக்கம்

சிபிஐ(எம்எல்) விபிஐஎன் வேட்பாளர் ஆ. ரேவதி விலகல்

6 Apr 2026, 5:30 am
சிபிஐ(எம்எல்) விபிஐஎன் வேட்பாளர் ஆ. ரேவதி விலகல்

சிபிஐ(எம்எல்) விபிஐஎன் வேட்பாளர் ஆ. ரேவதி விலகல்

புதுக்கோட்டை ஏப். 3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளர் எம். சின்னதுரைக்கு ஆதரவு தெரிவித்து, சிபிஐ(எம்எல்) விபிஐஎன் வேட்பாளர் ரேவதி போட்டியிலிருந்து விலகினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விபிஐஎன் சார்பில் அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆ. ரேவதி, கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ரேவதி போட்டியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்திற்கு, ரேவதி மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram