தமிழக அரசின் ஆளுநர் உரை : மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு!
18 Jun 2026, 9:58 pm

தமிழக அரசின் ஆளுநர் உரை : மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு!

சென்னை, ஜூன் 18 - தமிழக அரசின் ஆளுநர் உரைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தவெக அரசின் கொள்கை விளக்கமாக ஆளுநர் உரை

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தவெக அரசின் கொள்கை விளக்க மாகவே ஆளுநர் உரையை பார்க்க வேண்டியுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதி பகிர்வை அளித்திட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்படுவதுடன் சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது, திசை மாறிச் சென்ற வருவாயை முறையாக அரசின் கருவூலத்திற்கு கொண்டு வரும் நட வடிக்கை, வேளாண் விளைபொருட் களுக்கு உரிய லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்தல், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை போன்ற அறிவிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

சாதிவாரி இடஒதுக்கீடு ஏற்கத்தக்கது அல்ல!

பொதுவாக மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளான பகுதியினர் நலன், தொழில் வளர்ச்சி, கல்வி, மொழிக் கொள்கை ஆகியவை குறித்து கவனம் செலுத்தப் படும் என்று அறிவித்திருப்பது வரவே ற்கத்தக்க அம்சம். அதேசமயத்தில், தவெக அரசின் அடிப்படை கொள்கையாக சாதிவாரி இட ஒதுக்கீடு என்பது ஏற்கத்தக்கதல்ல. அது சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குவதாக அமையும்.

ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முன்வர வேண்டும்!

நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பு வதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். அதேசமயம், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கு அரசு முன்வர வேண்டும். மேலும், நீண்ட காலமாக பல்வேறு பெயர்களில் பல்வேறு சம்பள நிலைகளில் நிரந்தரமின்றி தற்போது பணி யாற்றிவரும் ஆசிரியர்கள் பணிகளை நிரந்தரப்படுத்துவதற்கும், ஆசிரியர் கல்வி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதற்கும் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது இந்த பிரிவினரையும் உள்ளடக்கியதாக அந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தொழிற்சாலை சலுகை குறித்து வெள்ளையறிக்கை வெளியிடுக!

ஏற்கெனவே உள்ள தொழிற்கொள்கை களோடு வருங்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய தொழிற் கொள்கை உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக நீண்ட நெடுங்காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வரும் முதலீடுகளை ஈர்ப்ப தற்காக அரசின் சார்பில் தொழிற்சாலை களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளி யிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

அரசுத் துறைகளில் தற்போதுள்ள காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. லட்சக்கணக்கான பணியிடங்கள் காலி யாக உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் அரசுப்பணி கனவு மெய்ப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படாதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

எனவே, காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கும், தற்போது நிரந்தரப் பணியிடங்களில் உள்ள தினக்கூலி, ஒப்பந்தக் கூலி, வெளி முகமை உள்ளிட்டவர்களையும் பணி நிரந்தரம் செய்திட நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இதேபோன்று, செவிலியர்களையும், தூய்மைப் பணியாளர்களையும் நிரந்தரம் செய்திட அரசு முன்வர வேண்டும். மேலும், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களி லும் நீண்ட காலமாக ஊழியர் பற்றாக்குறை நிலவி வருவதை கருத்தில் கொண்டு அங்குள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்பிட உரிய அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிட வேண்டும்.

புனிதமான நோக்கங்கள் என்றால் அவை எவை?

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், கோவில் சொத்துக்கள் அனைத்தும் அதன் புனிதமான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவது இந்த அரசால் உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

மக்களின் காணிக்கை மற்றும் அரசின் உதவிகளோடுதான் கோவில்கள் நிர்வகிக்கப்படுகின்றன. கோவில்களின் சார்பாக பல கல்வி நிலையங்கள் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து ஏற்கெனவே பலரும் மாறுபட்ட கருத்துக்களை தெரி வித்துள்ள நிலையில், கல்வி போன்ற நோக்கங்களும் புனிதமான நோக்கத்தின் பகுதியாக இருக்கும் என்று வெளிப்படை யாக அறிவிப்பது மிகவும் அவசியமாகும். அத்துடன் கோவில் நிலங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்து வருபவர்களின் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதிய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி வழங்குவது, பட்டியல் சாதி மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்து வது போன்றவற்றிலும் இந்த அரசு உரிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

பொதுவாக, இந்த ஆளுநர் உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதோடு, குறிப்பான மேற்கண்ட பிரச்சனைகள் மீது தவெக அரசு உரிய கவனம் செலுத்தி சரியான நடவடிக்கை கள் மேற்கொள்ளும் என்று நம்புகிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.