தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

717 மதுக்கடைகள் மூடல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

12 May 2026, 3:00 pm
717 மதுக்கடைகள் மூடல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையம், பேருந்து நிலையங்களின் அருகாமையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாடு மாநில வாணிப கழகம் 4765 மதுபான சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. இக்கடைகளில் வழிபாட்டுத்தலங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும் அருகாமையில் இயங்கி வரும் 717 கடைகள் அடையாளம் காணப்பட்டு இரண்டு வார காலத்திற்குள் மூடுவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளுக்கு , இணையாக எப்.எல்.2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் மதுக்கடைகளும் இயங்கி வருகின்றன. இவை வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அருகாமையில் சுமார் 100 தனியார் மதுக் கடைகளாக இயங்கி வருகின்றன. இந்த தனியார் மதுக் கடைகள் அரசு அறிவித்துள்ள மூடப்படும் கடைகள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்படும் தனியார் மதுபானக் கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இதர டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கும் அரசு முன்வர வேண்டும்.

தற்போது அரசு மூடுவதாக அறிவித்துள்ள 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 2500 ஊழியர்களுக்கு அரசின் இதர துறைகளில் கல்வித் தகுதிக்கேற்ப நிரந்தர மாற்றுப்பணி வழங்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.