தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலை விரிவாக்கத்திற்காக ஏழை மக்களின் வீடுகளை அகற்றும் முடிவை கைவிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

8 Dec 2025, 4:39 pm
சாலை விரிவாக்கத்திற்காக ஏழை மக்களின்  வீடுகளை அகற்றும் முடிவை கைவிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
<p><strong>சாலை விரிவாக்கத்திற்காக ஏழை மக்களின் &nbsp;வீடுகளை அகற்றும் முடிவை கைவிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</strong></p> <p>திருவண்ணாமலை, டிச.8- திருவண்ணாமலை வேட்டவலம் சாலை விரிவாக்கத்திற்காக ஏழை மக்களின் வீடுகளை அகற்றும் முடிவை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கீழ்பென்னாத்தூர் வட்டம், வேட்ட வலம் நகரில் சாலை விரிவாக்கப் பணி களுக்காக ஏழை, எளிய மக்களின் வீடு களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. பல ஆண்டு களாக அங்கு வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மாற்று இடம் வழங்குவதற்கு முன்னதாக வீடுகளை அகற்றும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி களிடம் கோரிக்கை விடுத்தனர். நீண்ட காலம் வீடு கட்டி குடியிருக்கும் மக்களின் குடியிருப்புகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மாற்று இடத்தில் வீடு கட்டி பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பில் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். பிரகலநாதன், ஏ. லட்சுமணன், வாசுகி, வழக்கறிஞர் அபிராமன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி. கே. வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.