மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிபந்தனைகள் இன்றி நிறைவேற்றிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தல்
2 Aug 2026, 9:45 pm

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிபந்தனைகள் இன்றி நிறைவேற்றிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில்

கன்னியாகுமரியில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நாடாளுமன்றம் மற்றும் மாநிலசட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை, மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற நிபந்தனைகளின்றி உடனடியாக அமல்படுத்தவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடு

இந்தியாவில் மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள் இருப்பினும், அரசியல் முடிவெடுக்கும் அமைப்புகளான நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம்மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு ஆணாதிக்க சமூக அமைப்பின் வெளிப்பாடாகவும்,பெண்களுக்கு அரசியல் அதிகாரம் மறுக்கப்படுவதன் அடையாளமாகவும் உள்ளது.பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதை மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றுடன் திட்டமிட்டு இணைத்த பாஜக அரசு,நடைமுறைக்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வருகிறது.பெண்களின் நீண்ட கால போராட்டத்தின் விளைவாக கிடைத்த உரிமையை காலவரை

யறையின்றி தள்ளிப் போடுவதற்கான அரசியல் சூழ்ச்சியாகவே இது அமைந்துள்ளது.

அதிகாரப் பகிர்வை மறுக்கும் ஒன்றிய அரசு

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்(AIDWA) உள்ளிட்ட பல்வேறு பெண்கள் அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து போராடி வருகின்றன.குறிப்பாக,நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தில்லியில் நாடாளுமன்ற வளாகம் அருகே தினந்தோறும் தர்ணா போராட்டங்களை நடத்தி, உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்திவருகின்றன. ஒன்றிய பாஜக அரசு பெண்களுக்கு அதிகாரப் பகிர்வை மறுப்பதை ஏற்க முடியாது.

தொடர்ந்து போராடும் பெண்கள்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க காலம் முதலே பெண்களுக்கு நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்துவதிலும், அதை 50 சதவீதமாகஉயர்த்துவதிலும் இடதுசாரி இயக்கங்கள் முன்னணிப் பங்காற்றியுள்ளன.பெண்களுக்கான அரசியல் அதிகாரம் என்பது சமூக நீதிக்கும், ஜனநாயகத்தின் விரிவாக்கத்திற்கும், பாலினசமத்துவத்தை நிலைநாட்டுவதற்குமான அடிப்படை அர சியல் நடவடிக்கையாகும்.எனவே, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாகஅமல்படுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில்நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவலியுறுத்துகிறது