மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
17 Jul 2026, 11:27 pm
<p><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்</strong></p><p>திருப்பூர், ஜூலை 17 – திருப்பூர் மாவட்ட மக்களின் வாழ்வாதார கோரிக்கை மற்றும் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து திருப் பூர் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, திருப்பூர் மாநகராட்சி 17, 19, 20 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரக் குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. எஸ்வி காலனி நால்ரோடு பகுதியில் கிளைச் செயலாளர் விவேக் துவக்கி வைக்க, மேட்டுப்பாளையம் நால்ரோடு, திருமலை நகர் ஜெயலட்சுமி பேக்கரி, அண்ணா வீதி குப்பை கிடங்கு அருகில், நெசவாளர் காலனி நால் ரோடு, காட்டன் மில் ரோடு பாப்பாத்தி அம்மன் கோயில் அருகில் ஆகிய பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்கத்தில் மாநகர செய லாளர் பா.சௌந்தரராஜன், மாநகரக் குழு உறுப்பினர்கள் மனோகரன், ராஜேந்திரன், பொன்.பாலகுமாரன், ராஜேஷ், பி.குமார், தமிழ்வாணன், நந்தகோபால் மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி அணியினர் பங் கேற்றனர். ஜேபி நகர் பகுதியில் வியாழனன்று துவங்கிய பிரச் சார இயக்கத்தை, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் இ.பி.ஜெயகிருஷ்ணன் மற்றும் மரிய சிசிலியா ஆகி யோர் துவக்கி வைத்தனர். கருப்பராயன் கோவில் வீதி, அம்பேத்கர் நகர், டி எம் எஸ் நகர், எம் எஸ் நகர் பேருந்து நிறுத்தம், மாகாளியம்மன் கோயில் டவர் லைன் மெயின் ரோடு, தங்கம் மெடிக்கல் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்டக் குழு உறுப்பினர் வை.ஆனந்தன், மாநகரச் செயலாளர் பா. சௌந்தர்ராஜன் மாநகர குழு உறுப்பி னர்கள் பங்கேற்று பேசினர். தங்கம் மெடிக்கல் பகுதியில் மாநகரச் செயலாளர் பா. சௌந்தரராஜன் இரண்டு நாள் பிரச்சார இயக்கத்தை நிறைவு செய்து உரையாற்றினார். ஆயிரத்திற்கும் மேற் பட்ட பொதுமக்களிடம் மக்கள் கோரிக்கை குறித்து பிரச் சாரம் செய்யப்பட்டது.</p>
