தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பளபளப்பான பொய்களும், இரக்கமற்ற கொடும் உண்மையும்! - வே. தூயவன்

2 Sept 2026, 9:09 pm
பளபளப்பான பொய்களும், இரக்கமற்ற கொடும் உண்மையும்! - வே. தூயவன்

பளபளப்பான பொய்களும், இரக்கமற்ற கொடும் உண்மையும்! - வே. தூயவன்

திருப்பூர் மாவட்டத்தில் எந்திரகதியாக இயங்கிக்கொண்டிருக்கும் பரபரப்பான திருப்பூர் மாநகரத்தில் இருந்து மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் தொலைதூரக் குக்கிராமங்கள் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த ஒருவார காலம் மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்தனர். நகரம், கிராமம் என வேறுபாடு இல்லாமல் எல்லா பகுதிகளிலும் மக்கள் மத்தியில் விலைவாசி உயர்வுகடும் பாதிப்பாக உள்ளது என்று குரல் ஒலித்தது. அரிசி,சர்க்கரை, பருப்பு விலை இப்படி உயர்ந்து இருக்கிறதேஎன்று வேதனைக் குரல் வெளிப்பட்டது. அதேபோல் குடிநீர் கிடைப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.திருப்பூர் மாநகரத்தில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் திடக்கழிவு மேலாண்மை பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது என்பதையும் மக்கள் சொல்வதைக்கேட்க முடிந்தது.

“செங்கொடி சாமி”

உடுமலை ஒன்றியம் மருள்பட்டி கிராமத்தில் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்தபோது, செங்கொடியுடன் வந்தவர்களைப் பார்த்து மக்கள் முகமலர்ச்சி யுடன் வரவேற்றனர். வயதான பெண் வீட்டில் இருந்தமருமகளை அழைத்து, இவர்கள்தான் நமக்கு பட்டா வாங்கிக் கொடுத்தவர்கள்; நாம் இருக்கும் இந்த வீடு இவர்கள்மூலம் கிடைத்தது; நமக்கு உதவி செய்த சாமி இது என்று செங்கொடியைக் காட்டிப் பேசியது நெகிழ்ச்சியைஏற்படுத்தியது என்று கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி கூறினார்.உடுமலை நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மக்களைச் சந்தித்தபோது, மற்ற அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக மட்டும்தான் எங்களைத் தேடி வருவார்கள், செங்கொடிக்காரர்கள் தான் எங்கள் பிரச்சனையைக் கேட்டு வருகிறீர்கள் என்று மக்கள் கூறினர். மார்க்சிஸ்ட் கட்சியினர் ஒரு வீட்டில் துண்டறிக்கை கொடுத்தபோது, அங்கிருந்த பதின்பருவ இளைஞர்கள், “நாங்கள் தவெக... நீங்கள் எந்தக் கட்சி?” என்றுகேட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி என்றுசொன்னவுடன், அந்த இளைஞர்கள் உற்சாகமாக, “சிகப்புத் துண்டு போட்டு சண்முகம் வருவாரே, அவருடைய கட்சி தானே?” என்று முகமலர்ச்சியுடன் கூறினர்.

மக்கள் உணர்வறிந்த போராட்டம்

தாராபுரம் நகரத்தில் வீடுவீடாகத் துண்டறிக்கை கொடுத்தபோது, ஒருவர் வழியில் நிறுத்தி, “பஸ் கட்டணத்தைக் கூட்டி அநியாயமாக வசூலிக்கிறார்களே, நீங்கள் கேட்க மாட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.அன்று காலைதான் தாராபுரம் பேருந்துநிலைய த்தில் கட்டணக் கொள்ளையைக் கண்டித்துச் சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்பட்டதை மாவட்டக் குழுஉறுப்பினர் கனகராஜ் எடுத்துக் கூறியதைக் கேட்டு, “ ஆம்,நீங்கள்தான் போராடுகிறீர்கள்” என்று அவர்ஆமோதித்தார். செங்கொடியுடன் தோழர்கள் வீடுவீடாகச் சென்றபோது, சிலர் கேட்காமலேயே பண த்தைக் கொண்டுவந்து கொடுத்தனர். “இல்லை, நாங்கள்வசூலுக்கு வரவில்லை, ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கைகளை அம்பலப்படுத்திச் சொல்வதற்கு வந்திருக்கிறோம்” என்று சொன்ன போது ஆர்வத்துடன் வரவேற்றனர்.

கொள்கைப் பிடிப்புக்கு நற்சான்று

பல்லடம் ஒன்றியத்தில் முதல் நாள் பிரச்சாரம் தொடங்கியபோது, 45 வயது மதிக்கத்தக்க கைத்தறி நெசவாளிஒருவர் தோழர்களின் அருகில் வந்து, “தேசிய அளவில் கொள்கைப் பிடிப்புள்ள ஒரே கட்சிகம்யூனிஸ்ட் கட்சிதான்; இந்தக் கட்சிதான் ஒடுக்கப்பட்ட மக்களின் நண்பன்” என்று கூறினார். வேறொருபகுதியில் பெண்கள், “நீங்கள் வந்து செல்கிறீர்கள், என்ன ஏது என்று கேட்கிறீர்கள்; ஆண்ட கட்சி, ஆளும்கட்சி யாரும் எங்களிடம் என்ன ஏது என்று எதுவும் கேட்பதில்லை” என்றனர். விசைத்தறித் தொழிலாளி ஒருவர்,“எங்கள் தாத்தா, பாட்டி காலத்தில் அவர்கள்கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தனர். பிறகு எங்களுக்குத் தொடர்பு இல்லாமல் இருந்தது. இப்போதிருக்கும் நிலைமையைப் பார்க்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிதான் மக்களுக்காகச் செயல்படுகிறது. எனவே எங்கள்பகுதியில் கிளை அமைக்க வேண்டும், கொடியேற்ற வேண்டும்” என்று கூறி, கட்சி அலுவலகத்தி ற்கு வருவதாகத் தெரிவித்தார். பட்டியலின மக்கள்குடியிருப்பில் மக்களைச் சந்தித்தபோது, “கிராமப்புறத்தில் பேருந்து வசதி இல்லை, எங்களுக்கு மயானம் ஏற்பாடு செய்து கொடுங்கள்” என்று கோரிக்கை விடுத்தனர்.

சிதைக்கப்பட்ட கிராமப்புற வாழ்வு

ஊத்துக்குளி வட்டாரத்தில் கிராமப்புறங்களுக்குச் சென்று பெண்களைச் சந்தித்தபோது, “100 நாள் வேலைத் திட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாகச் சம்பளம் வரவில்லை, நாங்கள் எப்படி வாழ்வது?” என்று வேதனையுடன்கூறினர். மோடி அரசு 100 நாள் வேலைத் திட்டத்தைச் சிதைத்ததைப்பற்றி மார்க்சிஸ்ட் கட்சியினர் எடுத்துக் கூறியபோது கவனமுடன் அதைக் கேட்டனர். “முன்பு எங்கள் கிராமத்தில் 50 பேர் வரை 100 நாள் வேலைக்குச் செல்வோம். ஆனால், இப்போது நான்கைந்து பேருக்குத்தான் வேலை தருகிறார்கள்” என்று பெண்கள் கவலையுடன் தெரிவித்தனர்.அவிநாசி ஒன்றியப் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் விவசாயி குடும்பத்தைச் சந்தித்துப் பேசியபோது, “உரம் விலை ரூ. 100-லிருந்து ரூ. 400-ஆக அதிகரித்துவிட்டது; எல்லாமே விலை ஏறிவிட்டது; விவசாயம் செய்ய முடியவில்லைஎன்று விவசாயி ஒருவர் கூறினார். மோடி அரசின் கொள்கைகளைப் பற்றிய விளக்கத்தை அவரும் ஆதரித்துதலையசைத்தார். அவிநாசி ஒன்றியத்தில் அவிநாசி, திருமுருகன்பூண்டி நகராட்சிகள் மற்றும் சுற்றியுள்ள ஐந்து ஊராட்சிகளைச் சேர்த்து ஏறத்தாழ 5,000 வீடுகளில் மக்கள் சந்திப்பு நடத்தப்பட்டு நோட்டீஸ்கள்வழங்கப்பட்டன.

வறட்சியின் பிடியில் காங்கேயம்

காங்கேயம் வட்டம் செம்மங்குழிப்பாளையம் பகுதியில் மக்களிடம் பிரச்சாரம் செய்த கட்சியினரிடம், “ஒரத்துப்பாளையம் அணையைத் தூர்வாரி முட்களை அகற்றவேண்டும்; தண்ணீர் இல்லாமல் இங்கு வாழ முடியவில்லை” என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.காங்கேயம் ஒன்றியத்தில் 359 கிராமங்களும், வெள்ளகோவில் ஒன்றியத்தில் 211 கிராமங்களும் கடும் வறட்சியின்பிடியில் சிக்கியுள்ளன. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இப்படி இருக்க, குடிநீர் வடிகால் வாரியத்தின்குழாய் உடைந்து பல நாட்களாகத் தண்ணீர் விரயமாகிக் கொண்டிருப்பதாகவும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர்.வெள்ளகோவில் பகுதியில் துண்டறிக்கை வழங்கியபோது, முதியவர் ஒருவர் கோபத்துடன், “முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (இவிஎம்) தொலைக்க வேண்டும்” என்றார். ஏராளமான கிராமங்களில் நில ஆக்கிரமிப்பு, பூமிதான பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட வேண்டியது மற்றும்வீட்டுமனைப் பட்டா கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. விரிப்புத்துணி தயாரிக்கும் விசைத்தறிக்கூடங்கள் வேலையில்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை வெள்ளகோவிலில் காண முடிந்தது.

உழைப்பைத் தின்னும் விலை உயர்வு

திருப்பூர் நகரில் பெண்கள் அரிசி, சர்க்கரை விலை உயர்வினால் கடும் கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்தனர்.அரசியல் நிலைமையைப் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியினர் விளக்கியபோது, “சட்டமன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம்; அங்கே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களைப் பற்றிப்பேசுவதில்லையே” என்று ஏமாற்றத்துடன் கூறினர். சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவது பற்றியும்பலர் அதிருப்தி தெரிவித்தனர். “பள்ளிக் கட்டணம், மருத்துவமனை செலவு என எத்தனை சம்பாதித்தாலும் போதவில்லை! என்ன செய்வது?” என்று திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் கவலைப்பட்டனர். அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும், மோடி அரசின் கொள்கைகளையும் கட்சியினர் விளக்கிக் கூறியபோது கவனமாகக் கேட்டனர். பேடிஎம், கூகுள் பே போன்ற யுபிஐ பணப் பரிமாற்றங்களுக்கும் வரி போடப்போவதாகக்கூறியதை அறிந்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எத்தனால் பெட்ரோல்: இளைஞர்களின் கோபம்

இளைஞர்கள் பலரிடம் பேசியபோது, எத்தனால் கலந்த பெட்ரோலைக் கொண்டுவருவது தொடர்பாகமோடி அரசு மற்றும் நிதின் கட்கரி மீது மிகுந்த கோபம் இருப்பதைச் சந்திப்பு இயக்கத்தின் போது அறியமுடிந்தது. நூல் விலை உயர்வில் திருப்பூர் பனியன்தொழில் நெருக்கடியில் சிக்கியுள்ளதால், வேலைவாய்ப்பும் வருமானமும் குறைந்து பலரும் கஷ்டப்படுவதைக் குறிப்பிட்டனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் செ.முத்துகண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் கே.ரங்கராஜ், எஸ்.ஆர்.மதுசூதனன், ஆர்.குமார், டி.ஜெயபால், ச.நந்தகோபால், கி.கனகராஜ், எஸ்.பவித்ரா தேவி உள்பட மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் என நூற்றுக்கணக்கான குழுக்களாகப் பல லட்சம் மக்களைச் சந்தித்தனர். மக்களின் மனச்சாட்சியாய் அவர்களோடு அரசியல் உரையாடல் நடத்தி, ஒன்றிய, மாநில அரசுகள் பின்பற்றும் கொள்கைகளைச் சுட்டிக்காட்டி இந்தச் சந்திப்புஇயக்கம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. அதேசமயம், ஆட்சியாளர்கள் சொல்லும் பளபளப்பான, கவர்ச்சிகரமான பொய்களுக்கு இடையே மக்களின் வாழ்நிலை இரக்கமற்ற முறையில் கொடுமையாக இருப்பதையும், மக்கள் அல்லல்பட்டுக்கொண்டி ருப்பதையும் காண முடிந்தது. மக்களோடு இணைந்து களத்தில் போராட வேண்டிய அவசியம் இருப்பதை இந்நிகழ்வு தெள்ளத் தெளிவாக உணரச் செய்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.