இடதுசாரிகளுக்கு வாக்களித்தோருக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
9 Oct 2026, 10:39 pm

இடதுசாரிகளுக்கு வாக்களித்தோருக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

சென்னை, அக். 9 -மதுராந்தகம், தாராபுரம் (தனி) தொகுதிகளுக் கான இடைத்தேர்தலில், இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்குவாக்களித்த அனைவருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்குவாக்களித்துள்ளவர்களுக்கு நன்றி.

அரசியல் உரையாடலுக்கு பயன்பட்ட இடைத்தேர்தல்!

கம்யூனிஸ்டுகளுக்கு தேர்தல் களம் என்பதும் மக்களுக்கான போராட்ட களத்தின் ஒரு அங்கமே ஆகும். சமூக மாற்றத்தை இலக்காக கொண்டவர்கள்என்பதால், அந்த நீண்ட நெடிய பயணத்தின் ஒரு பகுதியாகவே தேர்தல்களை கருதுபவர்கள். மக்களிடம் சென்று மாற்று அரசியல் பற்றிய உரையாடலை நிகழ்த்தினோம். பணபலம், அதிகார பலம் எதுவுமின்றி களம் கண்டோம். அடித்தள உழைப்பாளி மக்களின் நலன்களைக் கேள்விக்குறியாக்கி வரும் நவதாராளமயம், இந்தியா முழுவதும் பரப்பப்படும் வெறுப்பு அரசியல், ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தெல்லாம் இடதுசாரிக் கட்சிகளின் கருத்துக்களை எடுத்துரைத்தோம்.

மக்களுடனான சந்திப்பு மகிழ்வைத் தந்தது!

மக்களை நேசிக்கும் சித்தாந்த பிடிப்பு கொண்டவர்களுக்கு மக்களை சந்திக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் மகிழ்வை தருவதுதான் என்பதால் நிறையபுதிய தொடர்புகளை எங்களால் ஏற்படுத்த முடிந்துள்ளது.எங்கள் கட்சியின் முன்னணி ஊழியர்களும், இடதுசாரிக் கட்சிகளின் தோழர்களும் - குறிப்பாக பெண்கள்,இளைஞர்கள் - இணைந்து அயராத பணியை தேர்தல் களத்தில் மேற்கொண்டனர். அவர்களின் உழைப்பிற்குபாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.நாங்கள் மக்களிடம் நெருங்குவதும், மக்கள் எங்களை நெருங்குவதும் காலம் விதித்துள்ள கடப்பாடு என்றநம்பிக்கையோடு தேர்தல் களத்தில் இருந்து திரும்பியுள்ளோம்.

அர்ப்பணிப்பு மிக்க போராட்டம் தொடரும்!

எங்கள் பணி நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மட்டுமல்ல, வீதிகளில் தொடரும். தொழிலாளர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு வணிகர்கள், சிறு தொழில் புரிவோர், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நலன்களுக்காக எங்கள் பயணம் தொடரும். நம்பிக்கையோடு மக்கள் பணிக்கு எங்களை எதிர்காலத்திலும் அர்ப்பணித்துக் கொள்வோம்.

மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி. சுகந்தி, தாராபுரம் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ப. லட்சுமணன் ஆகியோருக்கு வாக்களித்த அனைவருக்கும், தேர்தல் களத்தில் அயராது பாடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேசன் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரித்தாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.