தவெக ஆட்சி அமைக்க ஆதரவு ; சிபிஎம் அறிவிப்பு!
8 May 2026, 10:21 pm

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு ; சிபிஎம் அறிவிப்பு!

சென்னை, மே 8 - தமிழகத்தில் ஜோசப் விஜய் தலை மையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு ஆதரவு அளிப்ப தென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.

எனினும், அமைச்சரவையில் பங்கெடுக்காமல் வெளியிலிருந்து இந்த ஆதரவு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் என். குண சேகரன் தலைமையில் வெள்ளிக்கிழ மையன்று சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்கள் கே. பால கிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், கே. பாலபாரதி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: ஆளுநரின் செயல்பாடுகள் ஜனநாயக விரோதமானது! தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தகட்சிக்கும் பெரும் பான்மை இடங்கள் கிடைக்காத நிலை யில், தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதனடிப்படையில், அக்கட்சியின் தலைவர் சி. ஜோசப் விஜய், ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி உள்ள நிலையில், அவரை ஆட்சி அமைக்குமாறும், சட்டமன்ற அவை யில் பெரும்பான்மையை நிரூபிக்கு மாறும் முடிவெடுக்க வேண்டிய ஆளு நர், ஜோசப் விஜய்யை அழைக்க மறுத்து இருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் நாடு மாநிலக்குழு சுட்டிக் காட்டுகிறது.

வெளிப்படையாகக் கண்டிக்க தவெக முன்வர வேண்டும்! ஆளுநர், அரசியல் பாரபட்சத் தோடு செயல்பட்டு வருவதும், ஏற் கெனவே உள்ள மரபுகள், நீதிமன்றத் தீர்ப்புகள், அரசியலமைப்புக் கோட்பாடுகளை மீறி இருப்பதும் முற்றி லும் ஏற்க இயலாத நடவடிக்கை ஆகும்.

ஆளுநரின் இத்தகைய நடவடிக்கை யை தமிழக வெற்றிக் கழகம், வெளிப் படையாக கண்டிப்பதே மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு ஆகியவற்றில் அக்கட்சி கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்பது ஜனநாய

க எண்ணம் கொண்டோரின் அழுத்தமான கருத்தும் எதிர்பார்ப்பும் ஆகும் என சிபிஐ(எம்) மாநிலக்குழு சுட்டிக் காட்டுகிறது. இதற்கிடையில் திமுக - அஇ அதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சிகள் நடப்பதாகவும் வரும் செய்திகள் மக்களின் தீர்ப்பிற்கு முற்றி லும் எதிரானதாகும்.

இதை ஏற்க இயலாது. அதிகாரத்தை பாஜக கைப்பற்ற அனுமதிக்க முடியாது! ஆளுநரின் நடவடிக்கை தமிழ்நாட்டில் சட்டமன்றத்தை முடக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை புகுத்து வதற்கும், மக்களின் தீர்ப்புக்கு மாறாக குதிரை பேரம் நடந்தேறுவதற்கும், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் வழிவகுத்து விடக் கூடாது.

இதுகுறித்து விவாதித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு, தமிழ் நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்படுவதையும், கொல்லைப் புற வழியாக பாஜக அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதையும் அனு மதிக்கக் கூடாது என்று முடிவுசெய்தது. ம

க்கள் வழங்கிய தீர்ப்பிற்கான மரியாதையை உறுதி செய்வோம்! இத்தகைய பின்புலத்தில் ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் மூலம் கேட்டுக் கொண்ட அடிப்படையில் அரசு அமைக்க ஆதரவை வழங்குவது என்றும், அதன் மூலம் ஆளுநரின் ஜனநா யக விரோத நடவடிக்கையை முறி யடித்து மக்கள் தீர்ப்பிற்கான மரியாதை யை உறுதி செய்வது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தீர்மானித்துள்ளது.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் இருவரும் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பா ர்கள்.

அதேநேரத்தில் அமைச்சரவை யில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்றும் மாநி லக்குழு முடிவு செய்துள்ளது.

மக்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்! புதிய அரசாங்கம் மதச்சார்பின்மை, எளிய மக்களை உள்ளடக்கிய பொரு ளாதார வளர்ச்சி, கூட்டாட்சி, சமூக நீதிக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்து மக்களின் விருப்பத்தை நிறை வேற்றுகிற வகையில் செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு தீர் மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.