தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

28 Oct 2026, 8:54 pm
பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

போபால்வன உரிமைச் சட்டம் மற்றும் 2013 ஆம் ஆண்டு நில எடுப்புச் சட்டம் (LARR Act) ஆகியவற்றை வெளிப்படையாக மீறிமத்தியப் பிரதேசத்தின் பன்னா மற்றும் சத்தர்பூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கென்-பெத்வாநதி இணைப்புத் திட்டம் உள்ளிட்டபல்வேறு அணை கட்டுமானத் திட்டங்களால், 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்தநிலங்களை விட்டு துரத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இவர்களில் சுமார் 60 சதவீதத்தினர் பழங்குடியின மக்கள் ஆவர்.இம்மக்கள் பல நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மரணப் படுக்கையில் கிடப்பது போலவும்ஆற்றில் செத்து மிதப்பதுபோன்று தண்ணீர் சத்யாகிரகம், கழுத்தில் தூக்குக் கயிறுகளுடனும் இவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். “நீதி வழங்குங்கள் அல்லது கொன்றுவிடுங்கள்” என்பதே அவர்களின் போராட்டத்தின் முழக்கமாக உள்ளது.

முக்கியமான பிரதான தேசியஊடகங்கள் ஆளும் பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்தப் போராட்டங்களுக்கு போதிய முக்கியத்துவத்தை கொடுக்க மறுத்து வருகின்றன. இந்நிலையில் பழங்குடி மக்கள் நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பழங்குடியினர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பிருந்தா காரத், துலிசந்த் மீனா, ஜஸ்விந்தர் சிங் மற்றும் ராம் நாராயண் குவாரியா ஆகியோர் இப்போராட்டத்தை வழிநடத்தும் அமித் பட்நாகரும் இணைந்து இரண்டு நாட்கள் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களைசந்தித்து ஆதரவுதெரிவித்துள்ளனர்.

அமித் பட்நாகர் மக்களின் உரிமைகளுக்காக சுமார் 28 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியவர். மக்களை போராட்டத்தில் வழிநடத்தும் முக்கிய நபராக இவர் இருப்பதன் காரணமாக பாஜக அரசு இவர் மீது பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.