தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்ற தேர்தல் முடிவும் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடும் - எஸ்.கண்ணன்

21 May 2026, 9:32 pm
சட்டமன்ற தேர்தல் முடிவும் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடும் - எஸ்.கண்ணன்

சட்டமன்ற தேர்தல் முடிவும் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடும் - எஸ்.கண்ணன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தலை மையிலான ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்குவது என முடிவு செய்தது. அதன்படி கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் மேற்படி தவெக ஆட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

பிற அரசியல் கட்சிகளைப் போல் அல்லாமல், சிபிஐ(எம்) எப்போதும் தனது கட்சியின் திட்டம், இடது ஜனநாயக அணிக்கான முயற்சி மற்றும் அகில இந்திய மாநாடு தீர்மானிக்கிற அரசியல் நடைமுறை உத்தி ஆகிய ஆவணங்களை முன்வைத்தே தேர்த லைச் சந்திக்கிறது. நபர் சார்ந்த விருப்பு வெறுப்பு களின் அடிப்படையில் சிபிஐ(எம்) ஒருபோதும் தேர்தல் உடன்பாடு கொள்வதில்லை. இன்றைக்கு நாட்டில் நிலவும் மிகப்பெரிய அபாயம் எது என்பதைக் கேள்விக் குள்ளாக்கி, அதற்கு விடையளிக்கும் வகையிலேயே அரசியல் உத்தியைக் கட்சி தீர்மானிக்கிறது.

அகில இந்திய மாநாட்டு வழிகாட்டுத

கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானத்தின் பத்தி 2.88, “மோடி அரசாங்கம் இந்துத்துவா சக்திகள் மற்றும் பெரும் முதலாளிகளின் கூட்டணியைப் பிரதிபலிக்கிறது. எனவே, நமது பிரதான கடமை ஆர்.எஸ்.எஸ் / பாஜக மற்றும் அதற்கு அடித்தளமாக இருக்கும் இந்துத்துவா - கார்ப்பரேட் கள்ளக் கூட்டணியை எதிர்த்துப் போராடி முறியடிப்பதாகும்” எனத் தனது கடமையைத் தீர்மானித்துள்ளது. இதற்காக இந்துத்துவா மதவெறிக்கு எதிராக அனைத்து மதச்சார் பற்ற சக்திகளையும் பரந்த அளவில் அணிதிரட்டக் கட்சி உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்துத்துவா மதவெறி எதிர்ப்புப் போராட்டத்துடன் நவதாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் இணைக்க வேண்டியது அவசியத் தேவையாகும்.

அதேபோல் பத்தி 2.92, “நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஒத்து ழைப்பு நல்கியும், நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒத்திசைவான பிரச்சனைகளில் ஒத்துழைத்தும் சிபிஐ(எம்) செயல்படும். ஜனநாயகத்திற்கு எதிராக நடைபெற்று வரும் எதேச்சதிகாரத் தாக்குதல்கள் மற்றும் ஆட்சிக்கு எதிரான கருத்துக்களைக் கூறு வோரை நசுக்குகிற கொடுங்கோன்மை மிக்க சட்டங்களைப் பிரயோகிக்கும் பாஜக ஆட்சிக்கு எதிராக, அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திக ளுடன் மார்க்சிஸ்ட் கட்சி கரம் கோர்த்திடும்” எனக் குறிப்பிடுகிறது. மேலும், பாஜகவை உறுதியாக எதிர்த்திடும் பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளு டன் மார்க்சிஸ்ட் கட்சி ஒத்துழைத்து, கூட்டு நடவ டிக்கைகளை ஆதரிக்கும் எனத் தெளிவாகக்

திமுக அரசு குறித்தான அணுகுமுறை

2025 ஜனவரியில் நடைபெற்ற 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டின் போது அன்றைக்கு ஆட்சியில் இருந்த திமுக அரசின் மீதான அணுகு முறை விவாதிக்கப்பட்டது. அதில், திமுக அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை வர வேற்கும் அதே நேரத்தில், குறைபாடுகளைக் களைய வும் மக்களைப் பாதிக்கும் கொள்கை முடிவுகளைக் கைவிடவும் வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாகச் சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற பிரச்சனைகள் வந்தபோது, இவற்றை எதிர்த்து மின் வாரிய அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் போ ராட்டங்களை நடத்தினோம். 8 மணி நேர வேலை நேரத்தை உயர்த்தியதை எதிர்த்தும் போராடினோம. சாம்சங் தொழிலாளர் போராட்டத்தின்போது காவல்துறையின் அடக்குமுறை, தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யவிடா மல் தடுத்த அரசு நடவடிக்கை ஆகியவற்றை எதிர்த்துப் போராடிய கட்சியின் மாநிலத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரசு ஊழியர், ஆசிரியர், மின்வாரிய மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், அங்கன்வாடி உள்ளிட்ட திட்டப் பணியாளர்கள் போன்ற தொழிலாளர் பிரச்ச னைகளில் சிபிஐ(எம்) தன்னுடைய கொள்கை நிலையி லிருந்து திமுக ஆட்சியை விமர்சனம் செய்து வந்திருக்கிறது. இதன் விளைவாக அரசு ஊழியர் நலன் சார்ந்த சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. அதேபோல் மாநில உரிமை சார்ந்த பிரச்ச னைகளில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீவிரமான எதிர்ப்பைப் பதிவு செய்தது. எனவே, திமுகவுடன் மதச்சார்பின்மை, மாநில உரிமை, மொழி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகத் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மாநில மாநாடு இறுதி செய்தது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பால் எழுந்த பதற்ற நிலையில், அன்றைய திமுக அரசு தனது மதச்சார்பற்ற கொள்கையை அமலாக்குவதில் உறுதி காட்டியது. இத்தகைய பின்னணிகளில்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை சிபிஐ(எம்) ஆதரிப்பது என்கிற கொள்கை முடிவு எட்டப்பட்டது.

தேர்தல் முடிவுகளும் மூன்று வாய்ப்புகளும்

ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கோ அல்லது அதிமுக-பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கோ அறுதிப் பெரும்பான்மையையோ, தனிப்பெரும் கட்சி என்ற நிலையையோ தரும் வகையில் அமையவில்லை. மாறாக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 இடங்களில் வெற்றி வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர். இந்த நிலையில், மார்க்சி ஸ்ட் கட்சி முன்வைத்த மதச்சார்பற்ற ஆட்சி அமைவ தையும், மக்கள் தீர்ப்பை மதிக்கும் வகையில் மாநில ஆட்சி அமைவதையும் தீர்மானிக்கும் நிலை உருவா னது. தவெக தலைவர் விஜய் அவர்கள், சிபிஐ(எம்) மாநிலத் தலைமைக்குத் தனது அரசை ஆதரிக்கக் கோரி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார். அதனைப் பரிசீலித்த கட்சியின் மாநிலக் குழு, மே 8 அன்று தவெக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு வழங்குவது என முடிவெடுத்தது.

இம்முடிவை எடுக்கும் முன் கட்சி தனக்கு முன்னாலிருந்த மூன்று வாய்ப்புகளைப் பரிசீலித்தது. ஒன்று தவெக ஆட்சியை ஆதரிப்பது. இரண்டு, அதிமுக மற்றும் திமுக இரண்டும் சேர்ந்து கூட்டணி ஆட்சி என்ற யோசனையை ஆதரிப்பது. மூன்றாவது, இவ் விரண்டு முடிவுகளையும் எடுக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழிவகுப்பது.

மூன்றாவது வாய்ப்பான குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது, சிபிஐ(எம்) முன்வைத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இந்துத்துவா ஆட்சியை எதிர்த்த போராட்டத்திற்கு எதிரான ஒன்றாக அமைந்து, புற வழியாக பாஜக ஆட்சிக்கே வழிவகுக்கும். இரண்டா வது வாய்ப்பான அதிமுக-திமுக கூட்டணி ஆட்சி என்பது தமிழக மக்களின் தீர்ப்புக்கு எதிரா னதாகும். அதுமட்டுமல்லாமல், அதிமுக இப்போது வரை பாஜகவுடன் தான் தனது அரசியல் உறவை வைத்துள்ளது. எனவே, சிபிஐ(எம்) முதல் வாய்ப்பான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவை வழங்குவதே பொருத்தமானது என்கிற முடிவிற்கு வந்தது.

தவெக அரசுக்கு நிபந்தனை

தமிழக வெற்றிக் கழகம் மதச்சார்பின்மைக் கொள்கையைப் பற்றி நிற்குமா என்று கேட்டால், சிபிஐ(எம்)-இடம் ஆதரவு கேட்ட தவெக தலைவர்கள், மதச்சார்பின்மைக் கொள்கையை உறுதியாகப் பின்பற்றுவதாக வெளிப்படுத்தியுள்ளனர். சிபிஐ(எம்) தலைமையும் அதை ஒரு நிபந்தனையாக முன் வைத்துள்ளது. தனிப்பட்ட மத உணர்வுகளையும் நம்பிக்கையையும் அரசியல் அதிகாரத்தை அடையப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என சிபிஐ(எம்) மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசன சட்டமும் தனது முகப்புரையில் இந்தியா ஒரு “மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு” எனக் குறிப்பிட்டுள்ளதை தவெக அரசு பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கட்சி முன்வைத்துள்ளது.

மக்கள் விருப்பமும் இடதுசாரிகளின் கடமையும்

இங்கு எழக்கூடிய முக்கியமான கேள்வி, ஐந்தாண்டுகள் பல்வேறு நலத்திட்டங்களை முன் வைத்து ஆட்சி செய்த திமுகவை மக்கள் ஏன் மீண்டும் அங்கீகரிக்கவில்லை; அல்லது கடந்த காலங்களைப் போல் திமுக மீது ஏற்பட்ட அதிருப்தி யை மக்கள் அதிமுகவுக்குச் சாதகமாக ஏன் வெளிப் படுத்தவில்லை என்பதும் விவாதப் பொருளாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் நலத்திட்டங்களைத் தாண்டித் தங்களின் வாழ்வாதார முன்னேற்றத்தைப் பெரிய அளவில் எதிர்பார்க்கும் குணத்தைக் கொண்டிருக்கிறார்களா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய அம்சம் ஆகும். மேலும், திமுக, அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுக்கு எதிரான மாற்றுக் கட்சி வரவேண்டும் என்ற விருப்பத்தை மக்கள் வெளிப்படுத்தியிருப்பது புரிகிறது.

மாற்றுக் கட்சி மாற்றுக் கொள்கையுடன் இருக்குமா என்பதை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. உண்மையில் மாற்று ஆட்சி என்பது மாற்றுக் கொள்கையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் சிபிஐ(எம்)-இன் விருப்பம். அதை விஜய் தலைமையில் அமைந்திருக்கும் தவெக ஆட்சி உறுதி செய்யுமா என்பதைப் பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.

முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில், அதன் வர்க்க நலன் மேலோங்கி அதிகாரத்தில் பிரதிபலிக்கும் நிலையில், மாற்றம் எதுவும் அடிப்ப டையில் ஏற்படப் போவதில்லை. அதை உருவாக்கு வதற்கு நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியி ருக்கிறது. குறிப்பாக சிபிஐ(எம்) தனது மாநாடுகளில் குறிப்பிடுகிற இந்துத்துவா மற்றும் கார்ப்பரேட் கொள்கைகளை முறியடிக்கிற தொழிலாளி, விவசாயி, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வெகுமக்க ளின் வலுவான போராட்டத்தை நடத்தி ஆளும் அரசு களை நிர்பந்திப்பதன் மூலமும், பாட்டாளி வர்க்கத் தின் செல்வாக்கு அதிகம் கொண்ட இடதுசாரி மாற்றுக் கொள்கையாலும்தான் இது சாத்தியம் என்பதை உறுதிபடத் தெரிவிக்கிறது. இக்காலகட்டத்தில் அதற்கான போராட்டங்களை சிபிஐ(எம்) முன்னெடுக்கும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.