தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெளியிலிருந்து ஆதரவு என்ற எங்களின் நிலைப்பாடு தொடரும்!

21 May 2026, 9:06 pm
வெளியிலிருந்து ஆதரவு என்ற எங்களின் நிலைப்பாடு தொடரும்!

வெளியிலிருந்து ஆதரவு என்ற எங்களின் நிலைப்பாடு தொடரும்!

பெ. சண்முகம் திட்டவட்டம்

சென்னை, மே 21- தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை பாடு தொடர்வதாக பெ. சண்முகம் தெரிவித்தார். ச. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்ச ரவை விரிவாக்கம் செய்யப் பட்டு, 23 பேர் புதிய அமைச்ச ர்களாக வியாழக்கிழமை யன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் பங்கேற் பது தொடர்பான கேள்விக்கு, “விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளும் அமைச்ச ரவையில் பங்கேற்பார்கள் என்றே நம்புகிறோம்” என்றார். சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதி முகவினர் தவெக அமைச்சர வையில் இடம்பெறவுள்ள தாக செய்திகள் வெளி யாவது பற்றிய கேள்விக்கு, அதிமுகவின் ஒரு பிரிவு தாமாக முன்வந்து தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து ள்ளதாகவும், அவர்கள் ஆட்சியின் ஒரு அங்கமாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதுவ தாகவும், சட்டரீதியாகவும் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதாகவும், ஒருவேளை அப்படியான சூழல் ஏற்பட்டால் அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாக லாம் என்றும் தெரிவித்தார்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம், அதிமுக வைச் சேர்ந்த ஒரு பிரிவினர் அமைச்சரவையில் இடம்பெறும் பட்சத்தில் அந்த ஆதரவை மறுபரிசீல னை செய்வோம் என்ற நிலைப்பாடு தொடர்கிறது” என்பதையும் குறிப்பிட்டார்.

பதவியேற்பு விழாவில், “வந்தே மாதரம், தேசிய கீதம், அதன் பிறகு தமிழ்த் தாய் வாழ்த்து” என்ற வரி சையில் நிகழ்ச்சி நிரல் அமைந்தது குறித்த கேள்வி க்கு, இதுபற்றி முதலமைச் சரிடமே கேள்வி எழுப்பிய தாகவும், அப்போது, ஆளு நர் பங்கேற்கும் நிகழ்வு களில் இந்த நடைமுறை யைத் தான் பின்பற்ற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவு இருப்ப தாகவும், அதை மாற்ற முயற்சித்த போதிலும் கூட ஆளுநர் ஏற்க மறுத்து விட்டார்; ஆளுநருக்கு, அவர் ஒன்றிய அரசின் பிரதிநிதி என்ற முறையில் அந்த உத்தரவை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று முதல்வர் தன்னிடம் தெரிவித்ததாகவும் பெ. சண்முகம் கூறினார். எனினும், இந்த உத்தரவு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகே பிறப்பிக்கப்பட்டது என்ற நிலையில், சட்டமன்ற த்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படுமா என்பது தெரியவில்லை என்றும், அப்போது ஏற்படும் சூழ்நிலையைப் பொறுத்து பார்க்கலாம் என்றும் பெ. சண்முகம் குறிப்பிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.