திமுக வேட்பாளர் வசந்தவேலுவை ஆதரித்து சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்
11 Apr 2026, 5:30 am

திமுக வேட்பாளர் வசந்தவேலுவை ஆதரித்து சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி, ஏப்.10- தமிழகத்தின் உரிமைகளைப் பாது காக்கவும், மத நல்லிணக்கம் தழைத் தோங்கவும் உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் ஏ.ஜே. வசந்த வேலுவுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தீவிரத் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை நகரில் திரு வெண்ணெய்நல்லூர் சாலையில் தொடங்கிய இந்தப் பிரச்சாரம், அண்ணா நகர், குமரன் தெரு மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகத் தொடர்ந்தது. அப்போது 'கடலை குறிஞ்சி கலைக்குழு' சார்பாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பாதுகாப்புடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக-பாஜக உள்ளிட்ட கட்சிகளின் 'எண்டிஏ' கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பி. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி. ஆனந்தன், வி. சாமிநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. சேகர், ஏ. தேவி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.