மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம் : பெ.சண்முகம் பேட்டி!
6 May 2026, 10:20 pm
<p><strong>மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம் : பெ.சண்முகம் பேட்டி!</strong></p><p>சென்னை, மே 6 – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்ட ணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, அவரது இல்லத்தில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் க. கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆர். செல்ல சுவாமி (பத்மநாபபுரம்), டி.லதா (கீழ்வேளூர்) ஆகியோருடன் சென்று பெ.சண்முகம் புதன்கிழமையன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பிற்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பெ. சண்முகம், தம்மிடம் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். பாஜக - அதிமுகவை நிராகரித்த மக்கள் அப்போது, “தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறுதிப்</p><p>பெரும்பான்மை பெறும் என்ற முறையிலேயே தேர்தலை எதிர்கொண்டோம்” என்று கூறிய பெ. சண்முகம், “அதிமுக – பாஜக கூட்டணியை தோற்கடிப்பது என்ற நோக்கத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம்,” என்றும்; “பாஜக தமிழக மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது” என்றும் குறிப்பிட்டார். கற்பனைச் செய்திகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை “புதிய ஆட்சியை பொறுத்தவரை அவர்கள்தான் (தவெக) முடிவெடுக்க வேண்டும். தவெக குறித்து இதுவரை எந்த விவாதமும் நடத்தவில்லை. ஊடகங்களில் நிறைய செய்திகளை அவரவர் கற்பனையாக எழுதிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் எந்த முடிவெடுத்தாலும் அதனை முறையாகத் தெரிவிப்போம். தற்போது வரும் செய்திகள் அனைத்துமே அந்தந்த ஊடகங்கள் அவரவர்களுக்கு வாய்ப்பாக, சாதகமாக எது வேண்டுமோ அதை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை” என்று பெ. சண்முகம் விளக்கினார். மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை மிக அவசியம் மற்றொரு கேள்விக்கு, “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம். மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை எதிர்காலத்திலும் அவசியம். நீண்ட காலத்திற்கு தேவை; அது தொடர வேண்டும். ஒன்றிய அரசாங்கத்தில் பாஜக ஆட்சி தொடரும் நிலையில், மதச்சார்பற்ற சக்தி களின் ஒற்றுமை அவசியம். அதனைக் காப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது” என்றும் தெளிவுபடுத்தினார்.</p>
