முந்தய பக்கம்

மேற்குவங்கத்தில் மக்கள் ஆதரவுடன் சிபிஎம் அலுவலகங்கள் மீட்பு

9 May 2026, 9:31 pm
மேற்குவங்கத்தில்  மக்கள் ஆதரவுடன் சிபிஎம் அலுவலகங்கள் மீட்பு

மேற்குவங்கத்தில் மக்கள் ஆதரவுடன் சிபிஎம் அலுவலகங்கள் மீட்பு

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் பட்ஜ் பட்ஜ் பகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸின் ஆக்கிரமிப்பில் இருந்த கட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களும், உள்ளூர் மக்களும் இணைந்து மீட்டுள்ளனர்.

அதேபோல், பட்ஜ் பட்ஜ் தொகுதியில் உள்ள பாசுல்தங்கா பகுதியிலும் சிபிஎம் அலுவலகம் மீட்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜியின் மருமகனும், டயமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் ஆதரவுடன், திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் இந்த அலுவலகம் நீண்டகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது உழைக்கும் மக்களும், சிபிஎம் ஊழியர்களும் இணைந்து இந்த அலுவலகத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram