கோவில் நில குத்தகை விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
30 Sept 2026, 12:02 am

கோவில் நில குத்தகை விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுச்சேரி, செப்.29-உயர்நீதிமன்ற தடையை மீறி கரையாம்புத்தூர் கோவில் நில குத்தகை விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ராமச் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம் யூன் கரையாம்புத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலங்களில் ,கடந்த 50 ஆண்டுகளாக 22 விவசாயிகள் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர். குத்தகைவரியை நிலுவையின்றி செலுத்தி வந்தபோதிலும், எவ்வித முன்னறிவிப்பு மின்றி, இந்து சமய அறநிலையத்துறை யின் அதிகாரபூர்வ ஒப்புதல் இல்லா மல் கடந்த 02.08.2026 அன்று கோவில் நிர்வாக அதிகாரிகளால் தன்னிச்சையாக நிலங்கள் மறு ஏலம் விடப்பட்டுள்ளன.

இந்த அநீதியை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய

தில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் 18.09.2026 அன்று தற்போதைய நிலையே தொடர வேண்டும் என இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நீதி மன்றத்தின் இந்தத் தடை உத்தரவை மதிக்காமல், புதிதாக குத்தகை எடுத்த நபர்கள் அங்கு விவசாயம் செய்ய முற்படுவதால், கரையாம்புத்தூர் கிராமத்தில் பதற்றமான சூழலும், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நியாயம் வழங்கக் கோரியும், சட்ட

விரோத ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.

இந்தச் சந்திப்பில் அகில இந்திய விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ராஜாங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமச்சந்திரன், கட்சி யின் செயற்குழு உறுப்பினர்கள் பெரு மாள், தமிழ்ச்செல்வன், விவசாய சங்கத்தின் புதுச்சேரி மாநில துணைச் செயலாளர் சரவணன், மாநில குழு உறுப்பினர் சதாசிவம், விவசாய சங்க நிர்வாகி பக்கிரி மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளான கண்ணன், செங்கதிர், சபரிராஜா, கலிய

மூர்த்தி, கலியபெருமாள், பரதன், கருணாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

எனவே புதுச்சேரி அரசு உடனடி யாக 02.08.2026 அன்று விதிகளுக்குப் புறம்பாகவும், உள்நோக்கத்தோடும் நடத்தப்பட்ட கோவில் நில குத்தகை ஏலத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி அத்துமீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதைப் போல, புதுச்சேரியிலும் ‘குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாவிடில், விவசாயிகளை ஒன்றுதிரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரப் போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.