புதுச்சேரியில் மக்கள் நலன் சார்ந்த அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் அறிக்கை
6 May 2026, 1:46 am

புதுச்சேரியில் மக்கள் நலன் சார்ந்த அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் அறிக்கை

புதுச்சேரி,மே 5 புதுச்சேரி மாநிலத்தின் அரசியல் சூழல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஎம் புதுச்சேரி மாநிலக் குழு விரிவான அறிக்கையை வெளியிட் டுள்ளது.

இது குறித்து மாநிலச் செய லாளர் எஸ். ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள செய்தி அறிக்கை வரு மாறு: மக்கள் விரோதக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது நடைபெற்ற 16-ஆவது சட்டமன்றத் தேர்தலில், கடந்த ஐந்து ஆண்டு களில் மக்கள் விரோதக் கொள்கை களைக் கடைப்பிடித்த என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பது கவலை யளிக்கிறது.

‘ஆட்சி மாற்றம் வேண்டும்’ என்ற பெரும்பாலான மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகை யில் செயல்பட, காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சிகளின் தலைமை தவறி விட்டது.

மாறாக, தங்களது சொந்த நலன் மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக அவ்விரு கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியதோடு, அவர்களின் ‘அரசி யல் மாற்றம்’ என்ற உணர்வையும் தகர்த்தன.

முதல்வர் கனவுகளில் மிதந்த காங்கிரஸ் - தி.மு.க. தலைவர்கள் இரு வரும் தோற்கடிக்கப்பட்டிருப்பது மக்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பா கும். வாக்குகளை விலைக்கு வாங்கிய பா.ஜ.க இந்தத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒவ்வொரு வாக்கும் ரூபாய் 1,000 முதல் 10,000 வரை விலை பேசப்பட்டிருக்கிறது.

பண மூட்டைகளைக் கொண்டு வந்து, மக்களின் வாக்குப்பெட்டியைத் திருடும் வேலையைப் பா.ஜ.க. போன்ற கட்சி கள் புதுச்சேரியில் செய்து, ஒரு மோச மான அரசியல் கலாச்சாரத்தை உரு வாக்கியுள்ளது.

இதனைத் தடுக்க வேண்டிய தே

ர்தல் ஆணையம் தனது கடமையைத் தவறியதோடு, ஆளுங் கட்சி வெற்றிக்கு ஒரு வகையில் உதவி யும் செய்து இருக்கிறது. லாட்டரி அதிபர் களும், மது மற்றும் நில விநியோக வியா பாரிகளும் மக்களின் வாக்குகளை விலை கொடுத்து வாங்கி, ஜனநாய கப் பண்புகளைச் சிதைத்துள்ளனர்.

இத்தகைய தவறான அரசியல் கலாச் சாரம் புதுச்சேரியின் எதிர்காலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.

தேர்தல் முடிவுகளின் போக்கு என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அதிகாரத்தை மீண்டும் கைப் பற்றியுள்ள போதிலும், கடந்த தேர்தலை விட என்.ஆர். காங்கிரஸ் கூடுதலாக இடங்களைக் கைப்பற்றி யிருப்பதும், பா.ஜ.க-வின் எண்ணிக்கை குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிபிஎம் நிலைப்பாடு மற்றும் மாகி வெற்றி இடதுசாரிக் கட்சிகளை ஒருங்கி ணைக்க காங்கிரஸ், தி.மு.க. தவறிய போதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரிகள் போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் தனித்துத் தேர்தலைச் சந்தித்தது.

மேலும், இதர 26 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜன நாயக சக்திகள் வெற்றி பெறு வதற்காகப் பணியாற்றி, தனது அரசி யல் நிலைப்பாட்டை உறுதியாகப் பின் பற்றியது.

மாகி தொகுதியில் இடது முன்னணி சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அசோக் குமார் வெற்றி பெற்று ள்ளார்.

அவருக்கு வாழ்த்துகளையும், நான்கு தொகுதிகளில் இடதுசாரி களுக்கு வாக்களித்த மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உளமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. நேர்மையான மாற்று அரசியல் பயணம் தொடரும் பணபலம் மற்றும் அதிகார பலத்தால் நிகழ்த்தப்பட்ட இந்தச் சீரழிவு களை முறியடித்து, ஒரு நேர்மையான மாற்று அரசியல் பயணத்தைப் புதுச் சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும்.

இந்தப் பயணத்திற்குப் புதுச்சேரி மக்கள் தங்களது மேலான ஆதரவை நல்க வேண்டும் எனவும், புதுச்சேரி மாநி லத்தில் மாறியுள்ள அரசியல் நிலை மைகளை முழுமையாக மதிப்பீடு செய்து, வரும் காலங்களில் தனது அரசியல் நடவடிக்கைகளை சிபிஎம் தீவிரப்படுத்தும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.