தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரியில் முடங்கிக் கிடக்கும் அரசு நிர்வாகம் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஜூலை 13 முதல் சிபிஎம் மாபெரும் பிரச்சார இயக்கம்

5 Jul 2026, 9:18 pm
புதுச்சேரியில் முடங்கிக் கிடக்கும் அரசு நிர்வாகம் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஜூலை 13 முதல் சிபிஎம் மாபெரும் பிரச்சார இயக்கம்

புதுச்சேரியில் முடங்கிக் கிடக்கும் அரசு நிர்வாகம் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஜூலை 13 முதல் சிபிஎம் மாபெரும் பிரச்சார இயக்கம்

புதுச்சேரி, ஜூலை 5- புதுச்சேரி மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவு கள் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலை யிலும், ஆளும்கட்சியினரின் அதிகாரப் போட்டி யால் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் ஸ்தம்பித்துக் கிடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு சாடியுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளைத் தீவிரமாகத் திணித்து வரும் மாநில அரசின் போக்கைக் கண்டித்து, வருகிற ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் புதுவை மாநி லம் தழுவிய அளவில் தெருமுனைப் பிரச்சார இயக் கமும், துண்டுப் பிரசுர விநியோகமும் மிகத் தீவி ரமாக நடத்தப்படும் என்றும் கட்சி அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் சிபிஎம் மாநிலக் குழு கூட்டம் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மா னங்கள் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் முடிந்து 2 மாதங்களாகியும் துறைகள் ஒதுக்கீடு இல்லை

புதுச்சேரி தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் புதிய அமைச்சரவைகள் முழுமையாகப் பொறுப் பேற்று, சட்டமன்றக் கூட்டத்தொடர் விவாதங்கள் முடிந்து புதிய அரசுகள் தங்களது பணிகளைத் துரித மாகத் தொடங்கிவிட்டன. ஆனால், புதுச்சேரியில் மட்டும் பாஜாக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி யின் உள்கட்சிப் பூசலால் விசித்திரமான சூழல் நில வுகிறது. இங்கு இரண்டு கட்டங்களாக முதலமைச்ச ரும் ஐந்து அமைச்சர்களும் மட்டுமே பதவியேற்ற போதிலும், இதுவரை அவர்களுக்குரிய அரசுத் துறைகள் ஒதுக்கப்படவில்லை.

சட்டமன்றச் சபாநாயகர், துணை சபாநாய கர் தேர்தலோ அல்லது புதிய சட்டமன்றத்திற்கான ஆளுநர் உரையோ இதுவரை நிகழ்த்தப் படவில்லை. ஆளும் கூட்டணிக்குள் நிலவும் ஒற்று மையின்மையும், புதுச்சேரி மாநிலத்தின் உரிமை களை மதிக்காத பாஜகவின் மேலாதிக்கமுமே இந்த நிர்வாக முடக்கத்திற்கு முதன்மைக் காரண மாகும். இதனால் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் முடங்கி, கோப்புகள் அனைத்தும் முதலமைச்ச ரின் கையெழுத்திற்காகத் தேங்கிக் கிடக்கின்றன. அரசுத் துறைகளில் அதிகாரிகளின் தன்னிச்சை யான போக்கு அதிகரித்து மக்கள் நலன் முற்றி லுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உடனடி யாக இலாகாக்களை வழங்கி, சட்டமன்ற செயல் பாடுகளைத் தொடங்க வேண்டும் என சிபிஎம் மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது..

ரேஷன் கடைகளை மூட ‘டிஜிட்டல் காயின்’ சதி; இந்தி-சமஸ்கிருத திணிப்பு

மாநிலத்தில் அமைச்சரவை செயல்படாத சூழ லிலும், மின்துறை தனியார்மயம், சிபிஎஸ்இ பாடத் திட்டம் என்ற பெயரில் இந்தி-சமஸ்கிருத மொழி களைத் திணிக்கும் ஆர்எஸ்எஸ்-இன் செயல் திட்டம் போன்றவை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு, தாய்மொழியான தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நட வடிக்கையும் இல்லை.

குறிப்பாக, மார்க்சிஸ்ட கட்சியின் தொடர் போ ராட்டத்திற்குப் பிறகுதான் புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கடைகள் செயல்படத் தொடங்கின. ஆனால், தற்போது ‘டிஜிட்டல் காயின்’ என்ற புதிய மோசடித் திட்டத்தின் பெயரில், ரேஷன் கடை களை முழுமையாக மூடுவதற்கு அரசு சதி செய் கிறது. ரேஷன் முறை என்பது பதுக்கல் பேர்வழி களுக்கு எதிராகவும், வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் உருவான திட்டமாகும். அதை அழிக்க நினைக்கும் இத்திட்டத்தைப் புதுவை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இதற்கு எதிராக இடதுசாரி மதச்சார்பற்ற சக்திகளைத் திரட்டி சிபிஎம் தொடர் மக்கள் இயக்கங்களை முன்னெடுக்கும் என அறிவித்துள்ளது

போலி மருந்து ஊழல் மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறை

கடந்த பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், பொதுமக்களின் உயிரோடு விளையா டும் வகையில் நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி மருந்து ஊழல் அம்ப லமாகி, குற்றவாளிகள் கைதாகி உடனே ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இத்தவறுக்கு எதிராக சிபிஐ விசாரணை எந்த அளவிற்கு நேர்மையாகத் தொடரும் என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. எனவே காலதாமதமின்றி விசாரணையை முடித்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மறுபுறம், புதுச்சேரியின் நகர்ப்புறப் பகுதிக ளில் கடுமையான குடிநீர்ப் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் நிலத்தடி நீர் முழுமையாகச் சுரண்டப்பட்டு உப்பாக மாறி வருவதால், சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி அனைத்துப் பகுதி மக்களையும் திரட்டி மாபெ ரும் கண்டன இயக்கத்தை சிபிஎம் நடத்தவுள்ளது.

5000 தொழிலாளர்களை வஞ்சிக்கும் எம்ஆர்எப் நிர்வாகம்: சட்டவிரோத கதவடைப்பு

நெட்டப்பாக்கம் கொம்யூன், ஏரிப்பாக்கத்தில் உள்ள எம்ஆர்எப் (MRF) தொழிற்சாலையில் 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு இரண்டு ஆண்டு தொழிற்பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 55 தொழிலாளர்கள் பணி நிரந்தர ஆணை கேட்டபோது, ஒன்றிய அரசின் நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைப் பயன் படுத்தி, அவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களா கவே தொடர நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது.

இந்தத் துரோகத்தை எதிர்த்து சிஐடியு சார்பில் கடந்த ஜூன் 29 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, நிர்வாகம் 5000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் சட்டவிரோதக் கதவடைப்பை அறி வித்துள்ளது. நியாயமாகக் கேட்கச் சென்ற தொ ழிலாளர்களின் குடும்பத்தினரைக் காவல்துறை மூலம் நிர்வாகம் அப்புறப்படுத்தியிருப்பது கண்ட னத்திற்குரியது. காவல்துறை உழைக்கும் மக்களு க்குப் பாதுகாப்பாக இல்லாமல், முதலாளித்துவ நிர்வாகத்தின் பக்கமே நிற்பது அநீதியானது.

புதுச்சேரி அரசிடமிருந்து மின்சாரச் சலுகை, நீராதாரம் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, அதே மாநில மக்களை வஞ்சிக்கும் எம்ஆர்எப் நிர்வாகத்தின் அடாவடிச் செயலை சிபிஎம் வன்மையாகக் கண்டிக்கிறது. புதுவை முதலமைச்சரும், தொழிலா ளர் துறையும், சம்பந்தப்பட்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு சட்டவிரோதக் கதவடைப்பை நீக்க உத்தரவிடுவதோடு, பயிற்சி பெற்ற தொழிலாளர்க ளுக்குரிய பணி நிரந்தர ஆணையை உடன டியாகப் பெற்றுத் தர வேண்டும் எனத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.