மேற்கு வங்கத்தில் சிபிஎம் போராட்டங்களுக்கு பெருகும் ஆதரவு
26 May 2026, 9:08 pm

மேற்கு வங்கத்தில் சிபிஎம் போராட்டங்களுக்கு பெருகும் ஆதரவு

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் 15 ஆண்டு கால ஆட்சியை இழந்தவுடனே திரி ணாமுல் காங்கிரஸ் தலைமறைவு ஆனது போல கட்சி அலுவலகத்தில் மட்டுமே உள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு திரி ணாமுல் தலைவரும், முன்னாள் முதலமைச்ச ருமான மம்தா பானர்ஜி, பொதுச்செயலாளர் அபி ஷேக் பானர்ஜி ஆகியோர் விருந்தாளிகளை போல அடிக்கடி வெளியில் விசிட் அடிக்கின்ற னர்.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போ தும் போல பாஜகவின் புல்டோசர் அடாவடி, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐ ஆர்), மதவெறி அடிப்படையிலான உத்தரவுக்கு எதிராக என மக்களுக்காக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறது.

சியால்டா, முர்ஷி தாபாத், ஹார்பர் பாயிண்ட், கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் சிபிஎம் தலைமை யில் புல்டோசர், எஸ்ஐஆர் உள்ளிட்டவற்றிற்கு எதிராக சிபிஎம் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து பிர்பூம் மாவட்டத்தில் எஸ்ஐஆர் என்ற பெயரில் தகுதியான வாக்காளர்களைப் பிறநாட்டு குடிமக்களாக முத்திரை குத்தும் முயற்சிகளுக்கு எதிராக வும், தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களை யும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும், சிபிஎம் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட துணை ஆட்சியர் அலுவல கத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

திங்க ளன்று மாலை நடைபெற்ற இந்த பேரணியில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சத்ரூப் கோஷ், பிர்தௌஸ் ஷமீம், சவ்யசாச்சி சாட்டர்ஜி மற்றும் இதர மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும், மக்கள் பிரச்சனை என்றால் முன்னணியில் இறங்கும் சிபிஎம் கட்சியின் போராட்டங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது.