தலைமை செயலாளர் பதவிவிலக கோரி வேலூரில் ஆர்ப்பாட்டம்
1 hour before

தலைமை செயலாளர் பதவிவிலக கோரி வேலூரில் ஆர்ப்பாட்டம்

இடதுசாரி கட்சிகள் மற்றும் இடதுசாரி மாணவர் இயக்கங்கள் மீது அரசியல் சாசனத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்ட தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஆகியோரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேலூர் மண்டி வீதியில் இடைக்கமிட்டி செயலாளர்கள் கே.பாண்டுரங்கன் டி.முரளி ஆர்.சுடரொளியன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி நிறைவு செய்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜே.சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.எஸ்.மகாலிங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்க மாநில இணை செயலாளர் சைலஸ் ஆகியோர் பேசினர்.