தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களுக்கு மின்சாரம் கொடுக்க முடியாத இரட்டை இன்ஜின் ஆட்சி தட்டுப்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி சிபிஐ(எம்) மாநிலம் தழுவிய போராட்டம்!

3 Jun 2026, 8:39 pm
மக்களுக்கு மின்சாரம் கொடுக்க முடியாத இரட்டை இன்ஜின் ஆட்சி தட்டுப்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி சிபிஐ(எம்) மாநிலம் தழுவிய போராட்டம்!

மக்களுக்கு மின்சாரம் கொடுக்க முடியாத இரட்டை இன்ஜின் ஆட்சி தட்டுப்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி சிபிஐ(எம்) மாநிலம் தழுவிய போராட்டம்!

லக்னோ பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி நடை பெறும் உத்தரப் பிரதேசத்தில் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இந்நிலையில் அம்மாநிலத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியது.

உபி பாஜக அரசு மின்சாரத் துறை யில் எடுத்துள்ள தவறான கொள்கை காரணமாக மாநிலம் முழுவதும் மின்சாரத்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். மீட்டர் பில்லிங்கில் முறைகேடு செய்வது, மின் இணைப்பைத் துண்டிப்பது மற்றும் மீண்டும் வழங்குவது என்ற பெயரில் மக்களிடம் அராஜகமாக பணப்பறிப்பு நடத்தப்படுகிறது. மேலும் சட்டவிரோமாகக் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

இந்நிலையில் தான் இதற்கு எதிராக போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத் தது. இதனடிப்படையில் ஜூன் 1 அன்று மாநிலம் முழுவதும் உள்ள கண்கா ணிப்புப் பொறியாளர் (Superinte nding Engineers) அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் போராட்டங்கள் நடைபெற்றன.

10 சதவீத கட்டண உயர்வை கைவிடுக!

இந்த போராட்டத்தின் போது 10 சத வீத மின் கட்டண உயர்வை உடனடியா கத் திரும்பப் பெற வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்வெட்டுகள் மற்றும் மின் விநியோகக் குறைபாடு களை உடனடியாகச் சரிசெய்ய வேண் டும். ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை முழு மையாகக் கைவிட வேண்டும். தட்சி ணாஞ்சல் மற்றும் பூர்வாஞ்சல் மின் விநியோகக் கழகங்களைத் தனி யார்மயமாக்கும் நடைமுறையை உடன டியாக நிறுத்த வேண்டும். புதிய மின்சார மசோதா 2025-ஐ ரத்து செய்ய வேண்டும். யோகி ஆதித்யநாத் அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில், அனைத்து நுகர்வோருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரமும், விவசாயிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவச மின்சார மும் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மேலும் மின்சாரத் துறையில் காலி யாக உள்ள பணியிடங்களுக்கு நிரந்த ரப் பணியாளர்களை நியமிக்க வேண் டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் இப்போராட்டத்தில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

விவசாயிகளுக்குக் குறைந்த அழுத் தம் (Low Voltage) போன்ற பிரச்சனை களைத் தீர்த்து 18 மணி நேரத்திற்கு முறையான மின்சாரத்தையும், நகர்ப் புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளு க்கு 24 மணி நேர தடையற்ற மின்சார விநி யோகத்தையும் யோகி தலைமையி லான பாஜக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சிபிஐ(எம்) வலி யுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.