மக்கள் துயரம் தீர்க்க முழக்கமிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உளுந்தூர்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்
19 Jun 2026, 11:55 pm

மக்கள் துயரம் தீர்க்க முழக்கமிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உளுந்தூர்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 19- மத்திய அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளையும், தொடர்ச்சியான விலைவாசி உயர்வையும் கண்டித்து, உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று (ஜூன் 19) எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாளுக்கு நாள் விண்ணைத் தொடும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையால் சாமானிய மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வரு கின்றனர். இதனைச் சிறிதும் கண்டு கொள்ளாத மத்திய அரசின் அலட்சி யப் போக்கைக் கண்டித்தும், தொழி லாளர்களின் மேலும், ஊரகப் பொரு ளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில், மகாத்மா காந்தியின் பெயரையே நீக்கிய மத்திய அரசின் செயல், வரலாற்றை மறைக்கும் அரசியல் நோக்கம் கொண்டது என்று பேச்சாளர்கள் சாடினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் நாகை மாலி மற்றும் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் ஆகியோர் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் எப்படி ஏழை மக்களைப் பாதிக்கிறது என்பது குறித்து விளக்கமாகக் கண்டன உரையாற்றினர். இவ்விழாவில் ஜி.ஆனந்தன், இ.அலமேலு, பி.ஸ்டாலின், வேலா.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எம்.ஆறுமுகம், வி.சாமிநாதன், பி.சேகர் எனப் பல மாவட்டக் குழு உறுப்பினர்களும், ஏராளமான கட்சித் தொண்டர்களும் திரளாகக கொண்டனர்.

களமருதூர்

களமருதூரில் திருநாவலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் கே.ஆனந்தராஜ் தலை மையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.செந்தில்,ஏ.வி.ஸ்டாலின்மணி, டி. எஸ்.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகின்றனர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.அய்யனார்,டி.ரகு,கே. சக்கரவர்த்தி, டி.சிவக்குமார், எம்.வீரன், கே.சிவகுமார்,கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.